மேலும் அறிய

தமிழக அரசு வழங்குவது குருவை தொகுப்பு அல்ல திமுக அறுவடை தொகுப்பு - ஓ.எஸ்.மணியன் விமர்சனம்

தமிழக அரசு வழங்குவது குருவை தொகுப்பு அல்ல திமுக அறுவடை தொகுப்பு பயனில்லாத குருவை தொகுப்பு கொடுத்துவிட்டு பசுமை புரட்சி செய்வதாக விளம்பரம் தேடுவதாக  முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் விமர்சனம். 

தமிழக அரசு வழங்குவது குருவை தொகுப்பு அல்ல திமுக அறுவடை தொகுப்பு, பயனில்லாத குருவை தொகுப்பு கொடுத்துவிட்டு பசுமை புரட்சி செய்வதாக விளம்பரம் தேடுவதாக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் விமர்சனம் செய்துள்ளார்.
 
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினராக ஓஎஸ் மணியனை அமைப்பு செயலாளராக அறிவித்துள்ளார். அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓஎஸ்.மணியன் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் அதிமுக அலுவலகத்திற்கு  வருகை தந்தார். அங்கு ஏராளமான தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்ததை தொடர்ந்து, அங்குள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து,  அதிமுக அமைப்பு செயலாளர் ஓஎஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அரசு வழங்குவது குருவை தொகுப்பு அல்ல அறுவடை தொகுப்பு எனவும் அனைத்து விவசாயிகளுக்கும் பயனில்லாத குருவை தோப்பு கொடுத்துவிட்டு பசுமைப்புரட்சி செய்கிறோம் என்று திமுக விளம்பரம் செய்வதாக விமர்சித்த அவர் இந்த ஆண்டு விவசாயிகள் குருவை காப்பீடு செய்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
 

தமிழக அரசு வழங்குவது குருவை தொகுப்பு அல்ல திமுக அறுவடை தொகுப்பு - ஓ.எஸ்.மணியன் விமர்சனம்
 
 
எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லாது என விமர்சித்த வைத்திலிங்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓஎஸ்.மணியன், பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்பது போல உள்ளது என்று விமர்சனம் செய்தார். ஓபிஎஸ் 22 பேரை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓஎஸ்.மணியன், அதிமுகவின் சட்ட விதிகளின்படி  வளர்ச்சி பாதைக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு செல்கிறார். எடப்பாடி கூட்டிய பொதுக்குழு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எந்த சூழ்நிலையிலும் தடம் மாறாதவர்கள். 1973 முதல் அதிமுக என்றுமே வளர்ச்சிப்பாதையில்தான்  செல்கிறது என்று கூறினார். இதனிடையே நாகை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர் செல்வம், ஓஎஸ்.மணியன் ஆகியோர் புகைப்படங்களில் ஒ.பன்னீர்செல்வம் புகைப்படம் அகற்றப்பட்டு இருந்தது. இருந்த போதும் கல்வெட்டில் இருந்து அவர் ஓபிஎஸ் பெயர் மறைக்கப்படாது மீண்டும் இணைக்க வாய்ப்பு இருக்குமோ என அங்கு கூடியிருந்த முணுமுணுத்துச் சென்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget