கரூர் : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து காலமானார்
முன்னாள் முதல்வர் கருணாநிதி குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்றதற்கு நங்கவரம் விவசாயிகள் போராட்டம் முக்கியக் காரணம்.
![கரூர் : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து காலமானார் Former Chief Minsiter Karunanithi Friend goundampatti Muthu Passes away கரூர் : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து காலமானார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/23/2288efd9cd17ae4d01b7f445dc3ff5b2_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து (97) இன்று (டிசம்பர் 23) வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆரம்ப காலம் முதல் நெருங்கிய நண்பராக இருந்து வந்த கவுண்டம்பட்டி முத்துவின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் திமுக எழுச்சிபெறுவதற்கு மிக முக்கியமான போராட்டமாக அமைந்த, 1956 நங்கவரம் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதியுடன் சிறைக்குச் சென்று விவசாய கூலிகள் உரிமையை மீட்டுக் கொடுத்தவர் கவண்டம்பட்டி முத்து. கவண்டம்பட்டி முத்து இளமைக்கால புகைப்படம் கவண்டம்பட்டி முத்து இளமைக்கால புகைப்படம் போராட்டத்தில் கவுண்டம்பட்டி முத்துவின் பங்கு அதிக அளவில் உண்டு.
காமராஜர் ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட குத்தகைதாரர் சட்டம், அடிப்படையில் பண்ணையார்கள் நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு 60-க்கு 40 விழுக்காடு சொந்தமென சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், குளித்தலை நங்கவரம் பண்ணையார்களான ராமநாதய்யர், ரெங்கநாதய்யருக்குச் சொந்தமான 30 ஆயிரம் ஏக்கரில் கூலி வேலை செய்த விவசாயிகளுக்கு சேரவேண்டிய உரிமையைப் பெற்றுத்தர முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் உத்தரவின்பேரில், கருணாநிதியுடன் கவண்டம்பட்டி முத்து கருணாநிதியுடன் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆறு நாள்கள் தொடர் போராட்டம் நடத்தி விவசாயிகளின் உரிமையைப் பெற்றுக்கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொண்டு சிறை சென்றுள்ள கவுண்டம்பட்டி முத்து மொழிப்போர் தியாகி ஆவார்.கருணாநிதியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த போராட்டம். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் 1957-ஆம் ஆண்டு திமுக முதன்முதலாக களமிறங்கிய தேர்தலின்போது, கருணாநிதி குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்றதற்கு நங்கவரம் விவசாயிகள் போராட்டம் முக்கியக் காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் முத்து இப்போராட்டத்தில் கவண்டம்பட்டி முத்துவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கருணாநிதி உடல்நல குறைவால் சென்னை கோபாலபுரத்தில் இருந்தபொழுது, முத்து நேரில் சென்று நலம் விசாரித்து வந்தார்.
உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட முத்துகடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவதியுற்ற கவுண்டம்பட்டி முத்துவை தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இன்று அதிகாலை கவண்டம்பட்டி முத்து உயிரிழந்ததை அடுத்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் கவுண்டம்பட்டி சுப்பிரமணி தலைமையில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துவதற்காகத் திரண்டுவருகின்றனர். வரும் டிசம்பர் 30-ஆம் தேதி திருச்சிக்கு வருகைதரவுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குளித்தலையில் உள்ள கவண்டம்பட்டி முத்துவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது மகன் அண்ணாதுரை சேலம் மாவட்ட மக்கள் செய்தித் தொடர்புத்துறை அலுவலராகத் தற்போது பணியாற்றிவருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)