Jayalalithaa Birthday: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்நாள்..! 75 கிலோ கேக் வெட்டிய எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 75 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடினார்.
அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை அ.தி.மு.க.வினர் கொண்டாடி வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு ஆதரவாக வந்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
75 கிலோ கேக்:
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி இன்று தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர், அவரது பிறந்த நாளை முன்னிட்டு கட்சி சார்பில் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை குறிப்பிடும் விதமாக தயார் செய்யப்பட்டிருந்த 75 கிலோ கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்தவருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், அவரது ஒவ்வொரு பிறந்த நாளையும் அ.தி.மு.க. தொண்டர்களும், அவரது விசுவாசிகளும் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்:
இந்த நிலையில், ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை இன்று அ.தி.மு.க.வினர் கொண்டாடினர். கடந்தாண்டு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகமடைந்தனர்.
இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் காலை முதல் குவியத் தொடங்கினர். இதையடுத்து, கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்த கொண்டார்.
ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை குறிப்பிடும் வகையில் 75 கிலோ எடை கொண்ட சிறப்பு கேக் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த கேக்கை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெட்டினார். இந்த கேக்கை நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வழங்கினார். இந்த கொண்டாட்டத்தின்போது அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.
மேலும் படிக்க: Jayalalithaa Birthday: ஜெயலலிதாவின் 75வது பிறந்தாள்..! 75 கிலோ கேக்கை வெட்டி கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி..!
மேலும் படிக்க: J Jayalalithaa: அன்பு.. ஆளுமை.. அதிகாரம்: ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள்.. வாழ்க்கை பயணம் ஓர் அலசல்..