மேலும் அறிய

"எட்டப்பன் ரகுபதி " சரமாரியாக கேள்வி எழுப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர்

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்வது குறித்து , எங்கள் பொதுச் செயலாளர் எழுப்பிய நேரடியான கேள்விகளுக்கு பதில் அளிக்க வக்கில்லாமல், கொத்தடிமை ரகுபதியை வைத்து புலம்பியதற்கு கண்டனம்.

அதிமுக, மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;

விடியா தி.மு.க - வின் நிர்வாகத் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் மந்திரி சபையில் , மந்திரி என்ற பதவியை மறந்த ரகுபதி என்ற நபர் தன்னிலை மறந்து, நேர்மையின் திருவுருவாகத் திகழும் முன்னாள் முதலமைச்சர் எங்கள் கழகப் பொதுச் செயலாளர், எதிர்க் கட்சித் தலைவர் 'புரட்சித் தமிழர்' எடப்பாடியார் அவர்கள் மீது அறிக்கை என்ற பெயரில் புலம்பி இருக்கிறார்.

உண்ட வீட்டுக்கு , இரண்டகம் செய்வது போல், வாழ்வளித்த இயக்கத்தையும் , அரசியல் அங்கீகாரம் தந்த புரட்சித் தலைவியையும் காட்டிக் கொடுத்து , தீய சக்தி திமுக - வில் தஞ்சமடைந்து தனது வாழ்வை மேலும் வளப்படுத்திக் கொண்டு எஜமான விசுவாசத்தைக் காட்ட முயற்சிக்கிறார். 1991-ல் இவரது சொத்தின் மதிப்பு என்ன ? இன்று இவரது சொத்தின் மதிப்பு என்ன ? என்பதை இவரது தொகுதி மக்கள் நன்கு அறிவார்கள்.

"காரியம் ஆக வேண்டும் என்றால் காட்டிக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்' என்று ஒரு பெரிய மனிதர் சொன்னதை நிரூபிக்கும் வகையில் , கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக மக்களின் நலனுக்கு 'நிதி ஆயோக்' கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லாமல் , இன்று தன் மகனையும் , அவரது கூட்டாளி பினாமிகளையும் காப்பாற்ற , டெல்லிக்கு காவடி தூக்க ' நிதி ஆயோக் ' பெயரை பயன்படுத்தும் சந்தர்ப்பவாதி திரு. ஸ்டாலின் , தனது கொத்தடிமை ரகுபதி பெயரால் பித்துகுளித்தனமாக உளறல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்லாயிரம் கோடிகளை கோல்மால்புர கொள்ளைக் கும்பல் வாரிச் சுருட்டியது அம்பலமானதும் , டெல்லி பாணியில் நடைபெறப் போகும் கைது படலங்களுக்கு பயந்து நடுங்குவது. எட்டப்பன் ரகுபதியின் வார்த்தைகளில் இருந்து தெரிகிறது. தமிழ் நாட்டில் சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை மத்திய அரசின் தன்னிச்சை அதிகாரம் பெற்ற புலனாய்வுத் துறைகளின் (சி.பி.ஐ / ஈ.டி) விசாரணையை எதிர்த்து உயர்நீதி மன்றத்திலோ , உச்சநீதி மன்றத்திலோ தமிழக அரசே வழக்குத் தொடுக்காத நிலையில் , விடியா திமுக அரசு கனிம வளக் கொள்ளை வழக்கில் அரசு அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கேட்டும் , மற்றும் சாட்சிகளை விசாரிக்கக் கூடாது என்றும் , டாஸ்மாக் வாழல் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணையை எதிர்த்தும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்ததில் இருந்தே 'மடியில் கனம் , வழியில் பயம்' என்பது தமிழக மக்களுக்கு தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

ஊழலுக்காகவும் , நாட்டு ரகசியங்களை வெளிநாட்டுக்கு தெரிவித்ததற்காகவும் இரண்டு முறை ஆட்சியை இழந்த நாசகார கும்பல். தங்களின் கயநலத்துக்காக கர்நாடகாவில் கபினி ஹேரங்கி , கிருஷ்ணராஜசாகரில் அணைகளைக் கட்ட அனுமதித்து , தமிழக மக்களை தண்ணீருக்கு கையேந்த வைத்த கும்பல்.

காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழகத்தின் காவிரி உரிமையை தாரை வார்த்துக் கொடுத்த கும்பல். தங்களது குடும்பத் தொழிலை பாதுகாக்க , மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை இதுவரை எதிர்க்கத் துணிவில்லாத கும்பல்.

கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்க ஒத்துழைத்த துரோகக் கும்பல். அலங்கோல ஆட்சியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, நீதி கேட்டு காவல் துறையில் புகார் அளிக்கும் பெண்களின் விபரங்களை திட்டமிட்டு வெளியிட்டு , பாதிக்கப்பட்ட பெண்கள் இனி தைரியமாக புகார் அளிக்க முன்வருவதைத் தடுத்து, பல 'சார்"-களைக் காப்பற்றும் கும்பல்.

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியை , பூலான் தேவி , சேலை கட்டிய ஹிட்லர் என்று வசைபாடிவிட்டு, பின்பு அவரது காலில் விழுந்து, சர்க்காரியா கமிஷன் வழக்குகளில் இருந்து தப்பித்த கேடுகெட்ட கும்பல்.

மத்திய காங்கிரஸ் அரசு, அறிவாலய மாடியில் உள்ள டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ.யை விட்டு ரெய்டு நடத்திய போது , கீழ் தளத்தில் வாய்பொத்தி , மெய்பொத்தி 63 சட்டமன்றத் தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து கூட்டணி அமைத்த தொடை நடுங்கி கும்பல்.

முத்துவேல் கருணாநிதி கனிமொழியும், ஆ. ராசாவும் 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய காங்கிரஸ் தி.மு.க கூட்டணி அரசாலேயே கைது செய்யப்பட்ட போது , 'கூடா நட்பு கேடாய் முடிந்தது' என்று புலம்பிய கும்பல்.

டெல்லி காங்கிரஸ் எஜமானர்களுடன் யாருக்கும் புரியாத வகையில் சமரசமாகி இன்றுவரை சாஷ்ட்டாங்கமாக காலில் விழுந்து கிடக்கும் கும்பல். 

எங்கள் தன்மானச் சிங்கம் எடப்பாடியாரின் நேரடியான கேள்விகளை , எதிர்கொள்ள முடியாமல் கொத்தடிமை ரகுபதி, அறிக்கை என்ற பெயரில் பிதற்றியுள்ளதைப் பார்த்து தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

'ஆதாயம் இல்லாமல் ஒருவர் ஆற்றை கட்டி இறைக்க மாட்டார்' என்ற ஒரு பழமொழி உண்டு. கொத்தடிமை ரகுபதி எந்தெந்த ஆதாயங்களுக்காக, கோல்மால்புர குடும்பச் சேற்றை கட்டி இறைக்கிறார் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும்.

உங்கள் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. நயவஞ்சகத்தின் மொத்த உருவமான, நக்கிப் பிழைப்பதையே பிறவி லட்சியமாகக் கொண்டு , காட்டிக் கொடுப்பதில் Ph.D., பட்டம் பெற்ற, எஸ். ரகுபதியின் கணக்குகள் எங்களிடம் உள்ளது.

நீ கக்கிய ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை. உன் கையில் அதிகாரம் இருக்கிறது என்ற துணிச்சலில் வாய் நீளம் காட்டி இருக்கிறாய். காலச் சக்கரம் சுழல்கிறது. இந்த நாசகார கொள்ளைக் கும்பலை தமிழக மக்கள் வீட்டிற்கு அனுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Trump Vs India: 350% வரின்னு சொன்350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Trump Vs India: 350% வரின்னு சொன்350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Embed widget