ஆயிரம் அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது! வீரமணி பேச்சு
ஆயிரம் அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது என விழுப்புரத்தில் திராவிட கழக தலைவர் வீரமணி பேச்சு

விழுப்புரம் : தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவாக கூலி பட்டாளங்களும், அடமான கட்சிகளும் உள்ளன. ஆயிரம் அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது என விழுப்புரத்தில் திராவிட கழக தலைவர் வீரமணி பேச்சு
பாஜகவுக்கு ஆதரவாக கூலி பட்டாளங்களும், அடமான கட்சிகளும் உள்ளன
விழுப்புரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் இது தான் திராவிடம். இது தான் ஆர்.எஸ்.எஸ் என்ற தலைப்பில் பரப்புரை கூட்டம் கலைஞர் அறிவாலையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உரையற்றினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பொன்முடி. செஞ்சி மஸ்தான் பங்கேற்பு.
ஆண், பெண் பேதம் இருக்கக்கூடாது
திருச்சி அடுத்த சிறுகனூரில் 30 ஏக்கரில், பெரியாரை அறிந்துக்கொள்ள 95 அடி உயர சிலை, நூலகம், ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது.சமூக முன்னேற வேண்டுமானால் பெண்கள் முன்னேற வேண்டும் என பெரியார் கூறினார். இந்த இயக்கத்தில் பிறவி பேதம் கூடாது. சமூக முன்னேற பெண்களுக்கு உரிமை, சமத்துவம் வேண்டும். மனு தர்மம் தான் ஆள வேண்டும் என ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் நோக்கம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பெண்கள் படிக்கக்கூடாது என்பது தான் மனு தர்மம். ஆண், பெண் பேதம் இருக்கக்கூடாது.
நூற்றுக்கு மூன்று சதவீதம் உள்ளவர்கள் அனைத்து பதவிகளிலும் நூறு சதவீதம் உள்ளனர். ஆட்சியை பிடித்தல் என்பது சமத்துவத்தை ஏற்படுத்தும் ஒரு கருவி. பெண்ணுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என பெரியார் சொன்னார். அதனை திராவிட மாடல் ஆட்சி நடத்தும் ஸ்டாலின் 50 சதவீதம் கொடுத்துள்ளது. போராடாமல் கொடுத்தவர் ஸ்டாலின். சொல்லாததையும் செய்ததுதான் திமுக ஆட்சி. பொய் வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்தார் மோடி. இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என கூறி ஆட்சிக்கு வந்தார் தற்போது 22 கோடி போருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். 15 லட்சம் கொடுப்போம் என கூறினார். அதிகாரத்தின் மூலம் எல்லோரையும் வழக்கு போட்டு பயமுறுத்துகிறார். வருமானவரித்து, சி.பி.ஐ. அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையத்தைக் கொண்டு மிரட்டுகிறார்கள்.
தமிழ்நாடு பெரியார் மண் உங்கள் ப**பு இங்கே வேகாது!
தமிழ்நாட்டில் சாதி, மத கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். தமிழ்நாடு பெரியார் மண் உங்கள் பருப்பு இங்கே வேகாது. அமித்ஷா ஒன்னும் பெர்னாட்ஷா இல்லை. எல்லா ஷாக்களையும் பார்ப்போம். அமைதிப்பூங்காவாக உள்ளது தமிழ்நாடு. பாபர் மசூதி இடித்து கவலரத்தை ஏற்படுத்தினார்கள். மதத்தால் வேறுபட்டாலும், மனதால் ஒன்றுபட்டவர்கள் தமிழர்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் மனு தர்மத்தை கொண்டு வரமுடியாது. ஆயிரம் அமித்ஷா வந்தாலும் எதுவும் நடக்காது. அமித்ஷா குஜராத்தி அரசு நிகழ்ச்சியில் பேசுகிறார். இதுவே நம் வெற்றி. இது பெரியார் மண். இந்த மண்னை கலவர மண்ணாக மாற்ற முடியாது.
வருகின்ற தேர்தலில் வாக்கை திருட நினைக்கிறார்கள். பீகாரில் செய்தது போல செய்ய நினைக்கிறார்கள். எத்தனையோ திருட்டை கேள்விப்பட்டுள்ளோம் ஆனால் இப்போதுதான் ஓட்டு திருட்டை கேள்விப்படுகிறோம். அதன் மூலம் ஆட்சியை திருடுகிறார்கள்.திமுக அதன் கூட்டனியை யாராலும் அசைக்க முடியாது. மீண்டும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும். என் பேசினார்.





















