Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டி.. இவர்தான் வேட்பாளரா?
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்த தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பு:
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்த தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாஜக தனித்து போட்டி:
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட நிலையில், இடைத் தேர்தலிலும், பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அதிமுக கூட்டணி இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக ஏபி முருகானந்தம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் பணி குழுவை பாஜக அமைத்தது. இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
2024 தேர்தலில் ஈரோடு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இடைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது எதிர்பார்ப்பை எழுப்பியது.
வாக்கு வங்கி, மக்களின் ஆதரவு ஆகியவற்றை கணித்து நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் முயற்சியாகவும், இந்த இடைத்தேர்தலானது பாஜகவுள்ளது.
அதிமுக- தமாகா
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கடந்த முறை அதிமுக கூட்டணி சார்பில், தமாகா சார்பில் களமிறங்கிய யுவராஜ், இம்முறையும் அங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து, கட்சி தலைவர் ஜி.கே. வாசன் மூலம் அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமியுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை, இரட்டை இலை சின்னத்தில்தான் தமாகா வேட்பாளர் போட்டியிட்டார் என்பதால், இம்முறை அதிமுக வேட்பாளரையே நேரடியாக களம் இறக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், அதிமுக வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், அதிமுக போட்டியிடுவதில் சிக்கல் உள்ளது. ஓபிஎஸ் - இபிஎஸ் பிரச்னை உள்ளது. அதனால் த.மா.கவை போட்டியிட சொல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இதையடுத்து, அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட போவது அதிமுக-வா, தமாகா-வா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
திமுக- காங்கிரஸ்
ஆளும் கட்சியாக இருக்கும் திமுக, இந்த தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்பது குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகிறது. ஏற்கனவே இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மறைந்த திருமகனின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவனோ அல்லது மறைந்த திருமகனின் மனைவி பூர்ணிமாவோ போட்டியிடுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அங்கு போட்டியிடப்போவது திமுக-வா, காங்கிரஸா என்பது இனிதான் தெரியவரும். அதேபோல், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடப்போவது அதிமுக-வா, தமாகா-வா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.