மேலும் அறிய

Manickam Tagore: நீங்களா நாங்களா பாத்துடுவோம்.. எந்த எல்லைக்கும் போக தயார்.. DK சிவக்குமாருக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!

Manickam Tagore: நமது விவசாயிகளின் உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க எங்களது குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் என டி.கே.சிவக்குமாருக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி.

தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல, அது டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும் என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக எம்.பி.யும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்:  மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அவர்கள், "மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது" என்றும், மத்திய அரசு இதற்கு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

டி.கே.சிவக்குமார் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாது

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில் கர்நாடக முதலமைச்சர் தொடர்ந்து பிடிவாதப் போக்கைக் கையாண்டு வருகிறார். கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்தப் பேச்சை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதையும் படிங்க: CM Vijay: சபாஷ் முதல்வரே.. அசத்திட்டீங்க போங்க! பாராட்டிய கையோடு வைகோ சொன்ன பகீர் பிளாஷ்பேக்!

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாடு ஒரு கீழ்படுகை மாநிலம் என்பதால், நமது உரிமைகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் கர்நாடகா தன்னிச்சையாகச் செயல்படுத்த முடியாது. கீழ்படுகை மாநிலங்களின் முழுமையான ஒப்புதல் இன்றி மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது. தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல, அது டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.

மோடி அரசின் கடமை

மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க விடாமல் தடுப்பது மத்திய மோடி அரசின் கடமை. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இந்தத் திட்டத்தை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; நமது மாநில உரிமைகளைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் சென்று போராடுவோம். 

எங்களது குரல் ஓங்கி ஒலிக்கும்

இன்று நான் தஞ்சாவூர் செல்லவிருக்கிறேன்; அங்கு இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேச உள்ளேன். காவிரி உரிமைக்காகத் தமிழ்நாடு எப்போதும் ஒன்றுபட்டு நிற்கும். தமிழ்நாட்டின் நலனையும், நமது விவசாயிகளின் உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க எங்களது குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் என தெரிவித்துள்ளார்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிமுகவில் கல்யாணசுந்தரத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரமிக்க பதவி: யார் இந்த கல்யாண சுந்தரம்?
அதிமுகவில் கல்யாணசுந்தரத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரமிக்க பதவி: யார் இந்த கல்யாண சுந்தரம்?
’தவெக-வில் இணைந்த வழக்கறிஞர் சங்க நிர்வாகி ரேவதி’ வலுபெறும் தவெக வழக்கறிஞர் பிரிவு..!
'தவெக-வில் இணைந்த வழங்கறிஞர் சங்க நிர்வாகி’ யார் இந்த ரேவதி மணிவண்ணன்?
TVK: கொள்முதல் விலை குறைவு.. கூடுதல் வசதிகள்! மாணவர்களுக்கான சைக்கிள் டெண்டரில் தவெக பெருமிதம்
TVK: கொள்முதல் விலை குறைவு.. கூடுதல் வசதிகள்! மாணவர்களுக்கான சைக்கிள் டெண்டரில் தவெக பெருமிதம்
Udhayanidhi: SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை..! இழுத்தடிக்கும் அரசு? ஸ்டாலின், உதயநிதி காட்டம்
SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை..! இழுத்தடிக்கும் அரசு? ஸ்டாலின், உதயநிதி காட்டம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Akwan: யூட்டன் அடித்து சென்னை பக்கம் திரும்பும் அக்வான் புயல்.. பேய் மழை கன்ஃபாம்.. அலறிவிடும் டெல்டா வெதர்மேன்!
Cyclone Akwan: யூட்டன் அடித்து சென்னை பக்கம் திரும்பும் அக்வான் புயல்.. பேய் மழை கன்ஃபாம்.. அலறிவிடும் டெல்டா வெதர்மேன்!
Gold Rate Today: சரசரவென சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.5,120 குறைந்தது.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது!
Gold Rate Today: சரசரவென சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.5,120 குறைந்தது.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது!
Toll Gate: வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி டிராபிக் ஜாம் தொல்லையே இருக்காது! பரனூரைத் தொடர்ந்து நெமிலியிலும்!
Toll Gate: வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி டிராபிக் ஜாம் தொல்லையே இருக்காது! பரனூரைத் தொடர்ந்து நெமிலியிலும்!
30 நிமிடப் பயணம் இனி 5 நிமிடம்! ரூ.621 கோடி மேம்பாலம் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் சொன்ன முக்கிய தேதி!
30 நிமிடப் பயணம் இனி 5 நிமிடம்! ரூ.621 கோடி மேம்பாலம் எப்போது திறக்கப்படும்? முக்கிய தேதி!
Tamil Nadu Weather: உஷார் மக்களே! உருவாகிறான் பேரரக்கன்! சூறாவளிக்காற்று! எங்கெல்லாம் மழை? மீனவர்களுக்கு வார்னிங்!
Tamil Nadu Weather: உஷார் மக்களே! உருவாகிறான் பேரரக்கன்! சூறாவளிக்காற்று! எங்கெல்லாம் மழை? மீனவர்களுக்கு வார்னிங்!
நிர்வாண போட்டோவிற்கு ஆசைப்பட்டு ராணுவ ரகசியங்களை பகிர்ந்த அதிகாரி! பாகிஸ்தான் உளவாளிக்கு இவ்வளவு மெசேஜா?
நிர்வாண போட்டோவிற்கு ஆசைப்பட்டு ராணுவ ரகசியங்களை பகிர்ந்த அதிகாரி! பாகிஸ்தான் உளவாளிக்கு இவ்வளவு மெசேஜா?
ரூ.22 கோடி சுருட்டல்! வங்கி கணக்குகளை குறிவைக்கும் சைபர் கொள்ளையர்கள் – உஷார் மக்களே!
ரூ.22 கோடி சுருட்டல்! வங்கி கணக்குகளை குறிவைக்கும் சைபர் கொள்ளையர்கள் – உஷார் மக்களே!
Rasi Palan: இன்று யாருக்கு ஜாக்பாட்? யாருக்கு அலைச்சல்? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Rasi Palan: இன்று யாருக்கு ஜாக்பாட்? யாருக்கு அலைச்சல்? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Embed widget