மேலும் அறிய

தனித்து போட்டி! ராமதாஸ் அதிர்ச்சி முடிவு! நிர்வாகிகள் கலக்கம்.. திமுக ஆஃபர் பின்னணி?

Pmk Ramdoss: "வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ராமதாஸ் தனித்துப் போட்டியிட முடிவெடுத்து இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது"

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. ஆளுங்கட்சியான திமுக தனது பழைய கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வரும் நிலையில், அதிமுக தனது கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழலில், வடதமிழகத்தில் செல்வாக்கு மிக்க பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக-வில் பிளவு: தந்தை - மகன் இடையே மோதல்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கட்சி தற்போது இரண்டு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகிறது. கட்சியின் அங்கீகாரம் மற்றும் சின்னம் அன்புமணி தரப்பிடம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிராக ராமதாஸ் தரப்பினர் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையே, அன்புமணி ராமதாஸ் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது ராமதாஸ் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் ராமதாஸுக்கு முட்டுக்கட்டை

அன்புமணியின் முடிவுக்குப் போட்டியாக, ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைய முயற்சி மேற்கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும், திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் கடும் எதிர்ப்பு காரணமாக, ராமதாஸைச் சேர்த்துக் கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. தொடக்கத்தில் 20 இடங்கள் வரை ராமதாஸ் தரப்பு எதிர்பார்த்த நிலையில், திமுக வெறும் 3 இடங்களை மட்டுமே ஒதுக்க முன்வந்தது. இதனால் அதிருப்தியடைந்த ராமதாஸ், தற்போது திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். திருமாவளவனை ராமதாஸின் பேரன்கள், சுகந்தன் மற்றும் முகுந்தன் ஆகிய இருவரும் திருமாவளவனிடம் பேசிய பிறகும், கூட்டணிக்கு வாய்ப்பில்லை என கை விரித்ததாக கூறப்படுகிறது. 

திமுக கொடுத்த ரகசிய ஆஃபர்?

தற்போதைய சூழலில் ராமதாஸ் மீண்டும் அன்புமணியுடன் இணைய வேண்டும் அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற நிலை உருவானது. ஆனால், திமுக தரப்போ, "நீங்கள் எந்தக் கூட்டணிக்கும் செல்ல வேண்டாம்; தனித்துப் போட்டியிடுங்கள்" என ஒரு ரகசிய 'ஆஃபர்' கொடுத்திருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது. ராமதாஸும் தனித்துப் போட்டியிடும் முடிவை நோக்கி நகர்வதால், அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கலக்கத்தில் நிர்வாகிகள்

ஒருவேளை ராமதாஸ் தனித்துப் போட்டியிட்டால், குறைந்தபட்சம் 40 முதல் 50 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், தன்னிடம் தேர்தல் செலவு செய்யப் பணம் இல்லை என்பதைச் சந்திக்க வரும் நிர்வாகிகளிடம், ராமதாஸ் வெளிப்படையாகக் கூறி வருவதாகத் கூறப்படுகிறது. தேர்தல் செலவுகளை வேட்பாளர்களே ஏற்க வேண்டிய சூழல் உருவானால், அது கட்சிக்குப் பின்னடைவைத் தரும் என்பதால், ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
தவெகவுடன் கூட்டணி.. திமுகவுடன் பேச்சுவார்த்தை - எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்
தவெகவுடன் கூட்டணி.. திமுகவுடன் பேச்சுவார்த்தை - எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget