மேலும் அறிய
Advertisement
'எடப்பாடி ஆளானு கேட்டுட்டு அடிச்சாங்க'.. ரத்தம் தெறிக்க வெளியேறிய அதிமுக பிரமுகர்!
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த நிர்வாகியை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரா? என்று ரத்தக்காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரை கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். ரத்தக்காயங்களுடன் வெளியே வந்த அவர் தன்னை தாக்கியவர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரா? என்று கேட்டு தாக்கியதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு ஆளாகியவர் ஜெயக்குமாரின் ஆதரவாளர் என்றும், அவர் பெரம்பூர் முன்னாள் பகுதி செயலாளர் மாரிமுத்து என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion