மேலும் அறிய

EPS : சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைக்கவேண்டும்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை முதல்வர் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் தற்போது வரும் விடியா அரசின் ஆட்சியில், நிர்வாகத் திறமையற்ற, தடுமாறும் தலைமையின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பல்வேறு விசித்திரங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 18 மாதகால ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து, கொசலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் பலாத்காரங்கள், போதைப் பொருட்கள் புழக்கம் போன்றவை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நிலை மிகமிக மோசமாகிவிட்டது. இதனால், மக்களும், பெண்களும் வீதிகளில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினரின் அராஜகமோ எல்லை மீறிப்போய்விட்டது.

தறிகெட்டு ஓடும் குதிரைகளைப் போல, அமைச்சர்கள் கட்டுப்பாடின்றி  தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்கள். திறமையற்ற முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று நான் சொன்னபோது, அவருடைய தொண்டரடிப் பொடியாழ்வார்களுக்கு கோபம் கொப்பளித்தது. ஆனால், இப்போது அவரே தன்னால் யாரையும் கட்டப்படுத்த முடியவில்லை என்று புலம்பியதை இந்த நாடே பார்த்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக காவல்துறை தலைவர் ஆபரேஷன் மின்னல் என்று மாநிலம் முழுவதும் 72 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 905 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடுகிறார். இவர்களில் 705 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், 2 ஆயிரத்து 300 ரவுடிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டமன்றம் எப்போதெல்லாம் கூட்டப்படும் என்ற செய்தி வருகிறதோ, அப்போதெல்லாம் இதுபோல பட காட்சிகள் தமிழகத்தில் அரங்கேறும். இப்படி ஆபரேஷன் மின்னல் பற்றியும், இதன் காரணமாக ரவுடிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓடிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காவல்துறைத் தலைவரின் இந்த அறிக்கையை தமிழக மக்கள் படிக்கும்போதே, சென்னையை அடுத்த ஊத்துக்கோட்டையில் உள்ள வடக்கு மண்டல ஐ.ஜி. பூர்வீக வீட்டில் திங்கட்கிழமை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், சி.சி.டி.வி. கேமரா, ஹார்டு டிஸ்க்குள் திருடப்பட்டுள்ளன என்று செய்திகள் வருகின்றன.

EPS : சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைக்கவேண்டும்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்

பணியில் உள்ள ஒரு ஐ.ஜி.யின் வீட்டிற்குள் ஆபரேஷன் மின்னலால் வெளிமாநிலங்களுக்கு ஓடிப்போன ரவுடிகளும், கொள்ளையர்களும் 24 மணிநேரத்தில் மீண்டும் எப்படி வந்தார்கள்? என்பது புரியாத புதிராக உள்ளது.

மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல்துறையின் முக்கிய பொறுப்பாகும். அதை விடுத்து விடியா தி.மு.க. அரசின் விளம்பர குழு தயாரித்து கொடுக்கும் திரைக்கதையை அரங்கேற்றும் வேலையை தமிழக காவல்துறை உடனடியாக கைவிட வேண்டும். 

உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கிய 2 ஆயரித்து 300 நபர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்கும் வேலையை காவல்துறை செய்கிறதா? என்பதற்கு சரியான விளக்கமில்லை. இவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மம் என்ன? என்பதை விளக்க வேண்டும். இனியாவது சட்டம் – ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TTV Dhinakaran Alliance: தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TTV Dhinakaran Alliance: தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
தலைமறைவான டிடிவி.! 15 நாட்களில் நடந்த திடீர் திருப்பம்- இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Embed widget