சின்னம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.. வைத்திலிங்கம் பேட்டி..
ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவியே கிடையாது என்பதால் ஜெயலலிதாவிற்கு துரோகம் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நேற்று வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். அத்துடன் அடுத்த 4 மாதங்களில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியும் சிறப்பு தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. அத்துடன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம், “அதிமுகவில் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை தொண்டர்களால் ஒற்றை வாக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒருங்கிணைப்பாளர்களின் பதவி 5 ஆண்டு கால பதவி, அதை பொதுக்குழுவால் நீக்க முடியாது , நேற்று நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது , பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பன்னீர்செல்வத்தை கட்டுப்படுத்தாது என்றும் , அதை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும் தற்பொழுதும் பன்னீர்செல்வம் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் , பொருளாளராக இருக்கின்றார் என்றும் கூறி தேர்தல் ஆணையத்திற்கு ஒபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
#BREAKING | அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் - பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம்https://t.co/wupaoCQKa2 | #OPSvsEPS #AIADMK #OPanneerselvam #EdappadiPalaniswami pic.twitter.com/kTMPuwPkJc
— ABP Nadu (@abpnadu) July 11, 2022
ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவியே கிடையாது என்பதால் ஜெயலலிதாவிற்கு துரோகம் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். மேலும் தன்னை முதலமைச்சர் ஆகிய சசிகலா அம்மாவுக்கு துரோகம் செய்ததை போன்று நான்காண்டு காலம் தனக்கு உறுதுணையாக இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர் கட்சி அலுவலகம் சென்றபோது எடப்பாடி ஆதரவாளர்கள் கல், அரிவாள், கம்பு வீசினர். ரவுடிகளை 5 நாளாக அங்கு தங்க வைத்திருந்து அட்டூழியம் செய்தனர், எனவே எங்களை குறை சொல்ல அவர்களுக்கு தகுதியில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்