மேலும் அறிய

வாக்காளர் பட்டியல் முறைகேடு... ”ஏன் இந்த அமைதி ஈபிஎஸ்?” அலறவிட்ட துரைமுருகன்

இந்த விவகாரத்தில் வாய்மூடி கள்ள மௌனம் காத்து தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

வாக்காளார் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆளும் பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுக்களை வைத்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது. ‘

இந்த நிலையில் தமிழ்நாடு மானத்தை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்துவிட்டாரா என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொய்களைக் கட்டவிழ்த்து ஆட்சியைப் பிடித்த பாஜக, தங்களுடைய ஆட்சித்திறனால் மக்களைக் கவர முடியாமல் நாட்டைத் தொடர்ந்து ஆள எத்தனையோ குறுக்கு வழிகளைக் கையாண்டு வருகிறது. தங்களால் வெற்றி பெறவே முடியாத மாநிலங்களில் ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கிறது.

கடந்த தேர்தல்களில் போலி வாக்காளர்களைச் சேர்த்து, அதன் மூலம் பாஜக தனது வெற்றியைச் சாத்தியப்படுத்தியதை மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்கள் ஆதாரங்களோடு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தேர்தல் மோசடி ஆதாரங்கள், தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாகவே மாறிவிட்டதை காட்டுகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கே பேராபத்து!

 

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, அடுத்த 5 மாதங்களில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின்போது நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களை விடக் கூடுதலாக 41 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். ஐந்தே மாதங்களில்  41 லட்சம் வாக்காளர்கள் எப்படி வந்தார்கள்.? வானத்திலிருந்து குதித்தார்களா?.


2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 30 தொகுதிகளை கைபற்றியது. பாஜக கூட்டணிக்கு 17 இடங்கள்தான் கிடைத்தன. இதனை அப்படியே சட்டமன்றத் தேர்தலில் மாற்றி அமைக்க வேண்டுமெனில் எதையாவது செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லுக்களை அரங்கேற்றியது பாஜக. 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் தோற்ற பாஜக கூட்டணி, அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றதற்குக் காரணமே போலியாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள்தான். கூடுதலாகச் சேர்க்கப்பட்ட 41 லட்சம் வாக்காளர்களால் தேர்தல் முடிவே மாறிப் போனது.  நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற காங்கிரஸ் கூட்டணி, பாஜகவும் தேர்தல் ஆணையம் கூட்டணி போட்டுச் செய்த சதித்திட்டத்தால் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது.

இந்த சதியை அம்பலப்படுத்த வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை வழங்குமாறு தேர்தல் ஆணையத்தைக் காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் கேட்ட போது வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை தேர்தல் நடந்து 45 நாட்களுக்குப்பின் அழித்து விடுமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது எனச் சொல்லி வாக்குச்சாவடி கண்காணிப்பு கேமரா பதிவுகளை எல்லாம் அழித்திருக்கிறார்கள்.

இதே பாணியில்தான் வரப் போகிற பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் மோசடிகளை அரங்கேற்ற பாஜக முயல்கிறது. SIR என்ற சிறப்புத் தீவிரத்  திருத்தம் என்ற பெயரில் பீகார் மாநில வாக்காளர் பட்டியலிலிருந்து பாஜகவிற்கு எதிரான மனநிலை கொண்ட வாக்காளர்கள் பல லட்சம் பேரை நீக்கியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.  வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி (SIR) என்கிற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையில் கை வைத்திருக்கிறது.  சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் பாஜகவின் கண்ணசைவிற்கும் அரசியல்  விருப்பத்திற்கும் ஏற்ப செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடப்பட்டிருக்கிற மிகப்பெரிய அச்சுறுத்தல். பீகாரில் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிற சூழலில், இவ்வளவு குறுகிய காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஏன்? என எதிர்க் கட்சிகள் அனைத்தும் கேள்வி கேட்டும் அதனை மதிக்காமல் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது தேர்தல் ஆணையம்.


வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் நாட்டு மக்களின் குடியுரிமையைச் சோதித்துப் பார்க்கும் நடவடிக்கையாகவே  தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது. ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டையையும், தேர்தல் ஆணையமே கொடுத்த வாக்காளர் அடையாள அட்டையையுமே கூட வாக்காளர் தகுதிக்கான அடையாளமாக ஏற்றுக் கொள்ளாமல் மக்களைத் திணறடித்தது தேர்தல் ஆணையம். உச்ச நீதிமன்றம் அவற்றையும் ஆவணங்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய பின்பும் அதனைப் புறக்கணித்து அராஜகம் செய்துள்ளனர்.


தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையினால் பீகாரில் 65 லட்சம் பேர் தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில் 36 இலட்சம் பேர் வேலைகளுக்காக வேறு மாநிலங்களுக்குப்  புலம் பெயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேலைக்காகத் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்களை எல்லாம் எந்தவிதக் கேள்வியுமின்றி நீக்கி உள்ளனர். அதோடு அவர்கள் வசிக்கும் மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைந்து கொள்ளலாம் என மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலையும் தெரிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.


தேர்தல் ஆணையத்தின் இந்த SIR நடவடிக்கையினால் பெரியளவில் ஏழை எளிய மக்களும் , சிறுபான்மையின மக்களும், பெண்களும் தங்களது வாக்குரிமையை இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதோடு போலி வாக்காளர்களையும் அதிகளவு சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத நபர்கள் பல பேர் ஒரே வீட்டில் வசிப்பதாக வாக்காளர் பட்டியலில்  பதிவாகி உள்ளது. SIR என்பது முறைகேட்டைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்படுகிறது என்றால் இந்த முறைகேடு எப்படி நடந்தது? முறைகேட்டைக் களைவதாகச் சொல்லிக் கொண்டு முறைகேட்டைத் தேர்தல் ஆணையம் செய்யலாமா? SIR என்ற முறையற்ற வாக்காளர் திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் உடனடியாகக் கைவிட வேண்டும். 


அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டு வாக்காளர்கள் தங்களது வாக்காளர் தகுதியை நிரூபிக்க வேண்டும் எனும் பெயரால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதே போல முறையற்ற வகையில் லட்சக்கணக்கான பிற மாநில மக்களைத் தமிழ்நாட்டில் சேர்க்கும் சதி திட்டத்தையும் ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ளக் கூடும் . இது தமிழ்நாட்டின் அரசியல் உரிமையையே அபகரிக்கும் செயல்.

நாட்டில் ஜனநாயகத்திற்கும் தமிழ்நாட்டு மக்களின் அரசியல் உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் வாய்மூடி கள்ள மௌனம் காத்து தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பாஜகவின் அடிமையாய் மாறி, அதிமுக வை அடமானம் வைத்தவர்,  தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா? இல்லை என்றால் SIR என்ற முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன்?

தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாகப் போராடி வெற்றி பெற முடியாத அடிமைகளும்  அவர்கள் எஜமானர்களும் குறுக்கு வழியில் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்டால், அது ஒருபோதும் நடக்காது. மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க,ஸ்டாலின் அவர்களோடு தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டு நின்று சதிகார கும்பலை விரட்டி அடிப்பார்கள்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget