மேலும் அறிய

நீட் தேர்வால் மாணவர்கள் இறப்புக்கு திமுகவே காரணம் - பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

’’நீட் தேர்வுக்கு உரிய பயிற்ச்சி அளிக்காமல், தேர்வு நடைபெறாது எனக் கூறி  படிக்க வேண்டாம் என்று மாணவர்களை திசை திருப்பிய தி.மு.க தான் தற்போதைய இரண்டு மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம்’’

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2014 வரை காங்கிரஸ் இலங்கை கள்ள உறவால் இலங்கை தமிழர்கள் பாதிக்கபட்டனர். மீனவர் மீதான தாக்குதல் என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது. தற்போதைய ஆட்சியில் ஒரே ஒரு நிகழ்வுதான் நடைபெற்றது. தமிழக மீனவர்கள் 7 ஆண்டுகளாக  பாதுகாப்பாக உள்ளனர். நீட் தேர்வு பயத்தால் 15 மாணவ செல்வங்கள் இதுவரை உயிரிழந்துள்ள சம்பவம் மிகப்பெரிய வருத்தத்தை தருகிறது. தயவு செய்து மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவை மேற்கொள்ளாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார். 

நீட் தேர்வால் மாணவர்கள் இறப்புக்கு திமுகவே காரணம் - பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

மேலும் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து மாணவர்களின் உணர்ச்சிகளை தூண்டி இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். இது போன்ற அரசியலை  ஒரு போதும் மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து நீங்க படிக்காதீங்க படிக்காதீங்கனு சொல்லி மாணவர்களை ஏமாற்றினார்கள். அப்போதே நாங்கள் கூறினோம் மாணவர்களை திசை திருப்பாதீர்கள் என. ஆனால் சுகாதாரதுறை அமைச்சர் நான் பேசியதை வைத்து காமெடி செய்தார். கல்வித்துறை அமைச்சர் டெல்லியில் மனு கொடுத்துவிட்டோம் நீட் தேர்வு வராது எனக்கூறி மாணவர்களை படிக்காமல் இருக்க காரணமாகிவிட்டார். அப்போதும் கூறினோம் உச்சநீதிமன்றத்தில் உறுதியாக்கபட்ட சட்டத்தை யாராலும் தடை செய்ய முடியாது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை பற்றிய புரிதல் இல்லாமல் கூட முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். 

நீட் தேர்வால் மாணவர்கள் இறப்புக்கு திமுகவே காரணம் - பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

நீட் தேர்வு வந்த பின்னர்தான் ஏழை மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆக முடிந்துள்ளது. அனைவருக்கும் சமமான நீட் தேர்வை ஏதோ பூதம் போன்று உருவகபடுத்தி அரசில் நோக்கத்திற்காக தவறாக சித்தரித்து தி.மு.க அரசியல் செய்துள்ளது. கடந்த ஆண்டு சிறந்த மாணவர்களை தமிழகம்  நீட்தேர்வில் பெற்ற நிலையில் தற்போதைய அரசு மாணவர்களுக்கு போதிய பயிற்ச்சியை வழங்காமலும் படிக்க வேண்டாம் என கூறியும் திடீரென நீட் தேர்வை எழுதுங்கள் எனவும் மாற்றி மாற்றி பேசியதால் மன அழுத்தாத்திலே இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் இழப்புக்கு திராவிட முன்னேற்ற கழகமே பொறுப்பேற்க வேண்டும். 

நீட் தேர்வால் மாணவர்கள் இறப்புக்கு திமுகவே காரணம் - பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக கவர்னரை மக்களும், முதல்வருமே வரவேற்றுள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி கவர்னரை பார்த்து அஞ்சுவது ஏன் அவர் எதையோ மறைப்பது போல் தெரிகிறது. கவர்னரை எதிர்ப்பவர்கள் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல் கவர்னரை கண்டு பயப்படுகிறார்கள் என கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
"சவாலை ஏத்துக்கிறோம்" களத்தில் இறங்கிய கெஜ்ரிவால், அதிஷி.. பாஜகவுக்கு தலைவலிதான் போலயே!
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
Embed widget