MK Stalin: எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டீங்க.. அழிவை நோக்கி திமுக.. இறங்கி அடிக்கும் வானதி சீனிவாசன்!
MK Stalin: மாற்றுக் கட்சி வேட்பாளர்களை எதிர்க்கத் திராணியின்றி அநாகரீக வார்த்தைகளை பேசி ஓட்டு கேட்பதுதான் திமுகவின் 70 வருட பிரச்சார முறையா? என வானதி சீனிவாசன் கேள்வி.

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தடுக்க தவறியதாக கூறி தஞ்சாவூர் மாவட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் த்ரிஷா என தொண்டர்கள் சிலர் தெரிவிக்க உடனே உதயநிதி சிரித்துக்கொண்டே எங்க தண்ணி வருதோ இல்லயோ, அங்க தண்ணீர் வரனும் என்றார். இவரது இரட்டை அர்த்தம் மற்றும் ஆபாச பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது. அதேபோல் புதிய தலைமைச் செயலகம் பற்றி பேசிய உதயநிதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கடலைப் பார்த்தவாறு இருந்தால் தான் முதலமைச்சருக்கு மூட் வரும் போல கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
உருவ கேலி செய்த ஸ்டாலின்
இந்நிலையில் தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பரப்பிரையின் போது பேசிய அவர் மக்களாகிய நீங்களே இப்போது என்ன சொல்லிக் கூப்பிட்றீங்க? பெட்டி பாமா. இன்னொன்னும் இருக்கு பல்டி பாமா. எப்படிதான் அந்த உருவத்தை வச்சு பல்டி அடிச்சாங்களோ தெரியல? என்று பேசிய வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் மாற்றுக் கட்சி வேட்பாளர்களை எதிர்க்கத் திராணியின்றி அநாகரீக வார்த்தைகளை பேசி ஓட்டு கேட்பதுதான் திமுகவின் 70 வருட பிரச்சார முறையா? என பாஜகவை சே்ர்ந்த வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்களை தரக்குறைவாக பேசும் தந்தை, மகன்
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக் கூட்ட மேடையில், தவெக வேட்பாளர் அவர்களைப் பற்றி உருவ கேலி செய்யும் விதமாக பேசியது கடும் கண்டனத்திற்குரியது. பிரச்சார மேடைகளிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் பெண்களை தரக்குறைவாகவும் இழிவாகவும் தொடர்ந்து பேசி வரும் தந்தையும் மகனும் தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து பெண்களை அநாகரீகமாக பேசி வருவது தொடர் கதையாகி வருகிறது. இது போன்ற பேச்சுக்களை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: MK Stalin: தவெக வேட்பாளர் உருவக்கேலி.. கருணாநிதி காலம் முதல் இதே வேலை.. ஸ்டாலினை சாடிய தவெக!
திமுகவின் 70 வருட பிரச்சார முறையா?
மாற்றுக் கட்சி வேட்பாளர்களை எதிர்க்கத் திராணியின்றி அநாகரீக வார்த்தைகளை பேசி ஓட்டு கேட்பதுதான் திமுகவின் 70 வருட பிரச்சார முறையா? தரம் தாழ்ந்து பேசிப் பேசியே அழிவை நோக்கிச் செல்லும் திமுக எத்தனை பட்டாலும் திருந்திய பாடில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Before You Go
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
ட்ரெண்டிங் செய்திகள்





















