கன்னியாகுமரியில் தபால் வாக்குப்பதிவு முறைகேடு - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்..
கன்னியாகுமரியில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுகவுடன் கூட்டணியில் இணைந்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கன்னியாகுமரியில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் ஆஸ்டின் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் நடைபெற்ற தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார். புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
.