ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் - அமைச்சர் மெய்யநாதன்
தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை பெற்று மிகப்பெரிய தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்வதால், ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் சேவைச் சங்கங்களின் சார்பில் இருதய சிகிச்சைக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. அதனை தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, பாரத சாரண சாரணியர் மாணவர்களுக்கான பயிற்சி முகாமை பார்வையிட்டு மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த மருத்துவ முகாம் வாயிலாக கண்டறியப்படும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் கலைஞர் காப்பீடு திட்டத்தின்கீழ் உயர்சிகிச்சை அளிக்கப்படும்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரும் சம்பா, தாளடி பயிர்களை கொள்முதல் செய்ய 150 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு முதற்கட்டமாக 85 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படும். விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
crime: மனைவியை கொன்று ‘ஹார்ட் அட்டாக்’ என நாடகமாடிய கணவன் கைது - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
மேலும் தொடர்ந்து பேசியவர், "மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திற்கு மக்கள் எளிதாக செல்லும் வகையில் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புறவழிச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிடம் ஒரு பகுதி இடிந்து விழுந்து அபாயகரமாக உள்ள கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்த கேள்விக்கு? பதில் அளித்த அமைச்சர் அதுகுறித்து தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இரு தினங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 30 -க்கும் மேற்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
ஈரோடு : கூட்டம் கூட்டமாக கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் - மலைக்கிராம மக்கள் அச்சம்
சீர்காழி தாலுக்கா பணங்குடி கிராமத்தில் அரசு பள்ளிக்கான கட்டிடங்கள் இல்லாத நிலையில் உடனடியாக வகுப்பறை கட்டிடம் கட்டித்தரப்பட்டுள்ளது என்றார். ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பற்றி கூறுகையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளதால் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெரும்" என்றார்.
Budget Session: பாஜக கூட்டணி கூட்டம்; ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு; எடப்பாடி கோரிக்கை நிராகரிப்பா?
அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் மெய்யநாதன், 48.35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவங்கி வைத்தார். முன்னதாக அமைச்சருக்கு மயிலாடுதுறை திமுக சார்பில் பூரண கும்பம் மரியாதை உடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா. முருகன், கால்நடைத்துறை மருத்துவர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.