மேலும் அறிய

DMDK : ‘அடையாளத்தை தக்க வைக்குமா தேமுதிக’ 2026 தேர்தலில் எடுக்கப் போகும் முடிவு என்ன..?

'விஜயகாந்த் மறைந்த பின்னர், அந்த கட்சி கட்டமைப்பு சார்ந்த இயக்கமாக மாறவில்லை. அதன் காரணமாக, இன்று அரசியல் வெளியில் தனித்து நிற்கும் வலிமை இழந்து நிற்கிறது தேமுதிக’

நடிகர் விஜயகாந்தின் எனும் ஒற்றை மனிதரின் தனிப்பட்ட செல்வாக்கால் உருவான இந்த இயக்கம், ஒரு காலத்தில் இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது சக்தியாக உயரக்கூடும் என்ற பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 2011 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற தேமுதிக, அரசியலில் தன் வளர்ச்சியின் உச்சத்தை தொட்டது.DMDK : ‘அடையாளத்தை தக்க வைக்குமா தேமுதிக’ 2026 தேர்தலில் எடுக்கப் போகும் முடிவு என்ன..?

மாறிய தேமுதிகவின் நிலை

ஆனால் இன்று, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக சந்திக்கும் நிலை முற்றிலும் மாறியுள்ளது. அரசியல் களத்தில் தேமுதிக இப்போது போராடுவது தேர்தல் வெற்றிக்காக மட்டுமல்ல; தன் இருப்பைக் காத்துக்கொள்ளும் கூட்டணி தேடலுக்காகவும்தான்.

2011க்கு பிறகு வந்த தேர்தல்களில் தொடர்ச்சியான பின்னடைவு, தனித்து போட்டியிடும் வலிமை குறைந்த நிலை, கட்சியின் ஒற்றை நம்பிக்கையான கேப்டனின் மறைவு என தேமுதிக இன்று கூட்டணி அரசியலில் நீந்தி கரைசேர வேண்டிய நிர்பந்தத்தில் தவித்து வருகிறது.

திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தைகள் ?

திமுக தலைமையிலான கூட்டணியுடன் சேர திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேச்சுவார்த்தைகளில் தேமுதிக வைத்துள்ள கோரிக்கை குறிப்பிடத்தக்கது.

15 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா இடம். ஆனால் திமுக தரப்பில் முன்வைக்கப்படும் எண்ணிக்கை என்பது வெறும் 6 மட்டுமே. இந்த இடைவெளி தேமுதிகவின் இன்றைய நிலையை வெளிப்படுத்துகிறது. ஒரு காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த கட்சி இன்று “எத்தனை தொகுதி கிடைக்கும்?” என்ற பேரப்பேச்சில் தன்னை நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது.

திமுக கூட்டணிக்குள் புதிய சமன்பாடு

தேமுதிக சேர்வது திமுக அணிக்கு ஒரு அரசியல் குறியீட்டு பலமாக இருக்கலாம். விஜயகாந்தின் பெயருடன் தொடர்புடைய நினைவுச் செல்வாக்கு சில பகுதிகளில் வாக்கு மாற்றத்தை உருவாக்கும் என்ற கணக்கீடும் இருக்கலாம்.

ஆனால் அதே நேரத்தில் இது திமுக கூட்டணிக்குள் உள்ள மற்ற கட்சிகளுக்கு புதிய சிக்கலை உருவாக்கும்.

ஏற்கனவே திமுக அணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் போன்ற கட்சிகள் தொகுதி பங்கீட்டில் உறுதியான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளன. தேமுதிக இணைப்பு அந்த சமநிலையை மாற்றக்கூடும். இதனால் கூட்டணிக்குள் அதிருப்தி உருவாகும் சாத்தியங்கள் தவிர்க்க முடியாதவை.

விஜயகாந்த் இல்லாத வெற்றிடம்

தேமுதிக எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை அதன் அடையாள நெருக்கடி. கட்சி உருவானதிலிருந்து அது தலைவர் மையக் கட்சியாகவே இருந்தது. விஜயகாந்த் இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட மக்கள் ஈர்ப்பே தேமுதிக வளர்ச்சியின் அடிப்படையாக இருந்தது.

அவர் மறைந்த பிறகு கட்சி ஒரு கட்டமைப்பு சார்ந்த இயக்கமாக மாறவில்லை. இதன் விளைவாகவே இன்று தேமுதிக அரசியல் வெளியில் தனித்து நிற்கும் வலிமையை இழந்துள்ளது.

தனித்து அரசியல் இடம் சாத்தியமா?

தமிழ்நாடு அரசியல் இன்று இரு பெரும் அணிகளின் கோட்டையாக மாறியுள்ளது. திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு வெளியே ஒரு கட்சி தனித்து எழுவது கடினமான பணியாகும்.

தேமுதிக தனித்து நிற்க வேண்டுமானால் அதற்கு தேவையானவை

உறுதியான வாக்கு அடிப்படை, மாவட்ட அளவிலான அமைப்பு, புதிய தலைமுறை முகங்கள், தெளிவான கொள்கை அடையாளம் இவற்றில் பல அம்சங்கள் தேமுதிகக்கு தற்போது தளர்வாகவே உள்ளன. அதனால் தேமுதிகக்கான உடனடி அரசியல் தேர்வு கூட்டணி தான். ஆனால் நீண்டகாலத்தில் அது கட்சியின் அடையாளத்தை மேலும் சுருக்கும் அபாயமும் கொண்டது.

முன்னே இருக்கும் அரசியல் பாதை

தேமுதிகவுக்கு 2026 தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனை. கூட்டணியில் சில இடங்களைப் பெற்று தொடர்வதா? அல்லது நீண்டகால கட்டமைப்புக்கான மாற்றத்தை முயற்சிப்பதா?இரண்டும் கடினமான பாதைகள். கூட்டணி உடனடி அரசியல் வாழ்வை தரும். ஆனால், அது கட்சியை முழுமையாக ஒரு “சிறுகூட்டணி கட்சி” என்ற அடையாளத்தில் முடக்கிவிடும். தனித்து வளர்வது கடினம். ஆனால் அது மட்டுமே தேமுதிகக்கு மீண்டும் ஒரு சுய அரசியல் இடத்தை உருவாக்கும் வாய்ப்பாக இருக்க முடியும்.

தேமுதிகவின் எதிர்காலம் என்ன ?

தேமுதிக இன்று கூட்டணி தேடலுக்கும், அடையாள தேடலுக்கும் இடையில் நிற்கிறது. ஒரு காலத்தில் மாற்று சக்தியாக எதிர்பார்க்கப்பட்ட கட்சி, இன்று அரசியல் வாழ்வை தொடர்வதற்கே பேரம் பேச வேண்டிய சூழலில் உள்ளது.

2026 தேர்தல் தேமுதிகக்கு ஒரு வாய்ப்பாகவும், ஒரு சோதனையாகவும் அமையும். அந்த வாய்ப்பு வெறும் சில தொகுதிகளுக்கானதா, அல்லது கட்சியின் எதிர்காலத்தை மீட்டெடுக்கும் புதிய பயணத்திற்கானதா என்பதை தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் தேமுதிக இருக்கிறது.

தமிழ்நாடு அரசியல் மேடையில் தேமுதிக மீண்டும் எழுமா? அல்லது கூட்டணி அரசியலின் நிழலில் கரைந்து போகுமா?  இதற்கான விடை வருங்கால அரசியல் நிகழ்வுகளில் வெளிப்படும்.

தலைப்பு செய்திகள்

TVK: மீறப்படும் விதிகள்; ஒத்துழைக்க மறுப்பது அமைச்சர்களா? அதிகாரிகளா? உத்தரவு போடுவாரா விஜய்?
TVK: மீறப்படும் விதிகள்; ஒத்துழைக்க மறுப்பது அமைச்சர்களா? அதிகாரிகளா? உத்தரவு போடுவாரா விஜய்?
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Dams In Karnataka:
Dams In Karnataka: "கேஆர்எஸ் முதல் கபினி வரை.." காவிரி குறுக்கே கர்நாடக கட்டிய அணைகள் எத்தனை?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Embed widget