மேலும் அறிய

Mamata Banerjee: ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?

Mamata Banerjee TMC WB: மம்தா பானார்ஜி அழைப்பு விடுத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டத்திற்கு, மொத்தமுள்ள 80 பேரில் 20 பேர் மட்டுமே பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mamata Banerjee TMC WB: அபிஷேக் பானார்ஜி மீதான தாக்குதலை தொடர்ந்து திட்டமிடப்பட்ட எம்.எல்.ஏக்களின் கூட்டத்திற்கு பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் வராதது பேசுபொருளாகியுள்ளது.

ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள்..!

அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாலர் அபிஷேக் பானர்ஜி தாக்கப்பட்டது மேற்குவங்கத்தில் மீண்டும் அரசியல் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதையடுத்து அக்கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்து இருந்தார். காலிகட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு, மொத்தமுள்ள 80 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 20 பேர் பங்கேற்றது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வராதது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்திது. ஒருவேளை மற்ற மாநிலங்களை போன்று மேற்குவங்கத்திலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு தாவுகின்றனரோ? எனவும் சந்தேகங்கள் எழுந்தன.

திரிணாமுல் காங்கிரஸ் சொன்ன விளக்கம்

ஆனால், அரசியல் வன்முறைகள் தொடர்பாக அரசாங்கத்தை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், போராட்டங்களை நடத்துவதில் தீவிரமாக உள்ளதால், பல எம்.எல்.ஏக்களால் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய கட்சியின் செய்தி தொடர்பாளர் குனால் கோஷ், “கடந்த சனிக்கிழமை அன்று அபிஷேக் பானர்ஜி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கல்யான் பானர்ஜி ஆகியோர் தாக்கப்பட்டதை கண்டித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் காரணமாகவே எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வரவில்லை. முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக அடுத்த 48 மணி நேரத்திற்கு போராட்டங்களை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். பகுதி மற்றும் வார்ட் அளவிலும் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

தர்ணா போராட்டம்:

தொடர்ந்து பேசுகையில், “எம்.எல்.ஏக்கள் அனைவரும் கட்சிக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளித்துள்ளார்கள். கூட்டம் தொடர்பான அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக கடந்த சனிக்கிழமை அன்று அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் களத்தில் உள்ளனர். இன்றைய பேரணிகளை தொடர்ந்து நாளை கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் தர்ணா போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என குனால் கோஷ் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து மேற்குவங்கத்தில் தொடர்ந்து பல்வேறு வன்முறைகள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: KIA Affordabale EV: நெக்ஸான் தான் டார்கெட்..! இன்ஜினே ஓடல, மின்சார எடிஷன் சமாளிக்குமா? கியாவின் மலிவு விலை SUV

மேற்குவங்க தேர்தல் முடிவுகள்:

தொடர்ந்து 15 ஆண்டுகளாக மேற்குவங்கத்தை ஆண்டு வந்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. வெறும் 80 இடங்களில் மட்டுமே கட்சி வெற்றி பெற, மம்தா பானர்ஜி தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியுற்றார். அதேநேரம், பாஜக 200-க்கும் அதிகமான இடங்களில் வென்று, அந்த மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியை பிடித்தது. திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி சென்று, மேற்குவங்க பாஜகவின் முகமாக உருவெடுத்த சுவேந்து அதிகாரி தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
Embed widget