மேலும் அறிய

DMK Congress Alliance : ”காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் சீட் கொடுக்கக் கூடாது’ போர்கொடித் தூக்கும் திமுக தலைவர்கள்..?

’ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் திமுகவிற்கு எதிரான கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்து வரும் நிலையில், அந்த கட்சிக்கு கூடுதல் சீட்களை கொடுப்பது தேர்தல் களத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்”

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, தான் போட்டியிட விரும்பும் 39 தொகுதிகளின் பட்டியலை தயாரித்து வைத்திருக்கிறது. அதை விரைவில் திமுக தலைமையிடம் அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

25 தொகுதிகளில் போட்டியிட்டு 18ல் வென்ற ஸ்டாலின்

கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2016 தேர்தலில் இதே திமுக கூட்டணியில் முட்டிமோதி 41 இடங்களை பெற்றது காங்கிரஸ். ஆனால், அதில் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றது. திமுக ஆட்சிக் கட்டிலில் அமராமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியின் தோல்வியும் முக்கிய காரணம் என அப்போது பேசப்பட்டது. குறிப்பாக, காங்கிரஸ் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் பாதியை திமுகவிற்கு விட்டுக்கொடுத்திருந்தாலும் 2016 தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்திருக்கும் என்பதும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக, காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களின் ஈகோ காரணமாக அவர்களுடைய ஆட்களுக்கு சீட் பெறுவதில் காட்டிய தீவிரத்தை தேர்தல் களத்தில் அவர்கள் காட்டாததுதான் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.

அதன்பின்னர் 2021 தேர்தலில் திமுக கொடுக்கும் தொகுதிகளை பெறும் மனநிலையிலேயே காங்கிரஸ் இருந்தது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர்களே திமுகவிடம் பெறும் தொகுதிகளில் மன நிறைவு அடையவேண்டும் என பேசினர். இந்நிலையில், அந்த தேர்தலில் 25 தொகுதிகளை திமுகவிடமிருந்து பெற்று, அதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதனை காங்கிரஸ் கட்சியே எதிர்பார்க்கவில்லை.

அதிக தொகுதிகளை எதிர்பார்க்கும் காங்கிரஸ்

அப்படியான நிலையில், இந்த தேர்தலில் கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதல் தொகுதிகளை பெற்று தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் இருக்கிறது. அதனடிப்படையிலேயே அவர்கள் கட்சி கூட்டத்திலும் பொதுவெளியிலும் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என்ற கணக்கில் காங்கிரஸ் போட்டிட நினைக்கும், தங்களுக்கு பலம் என எண்ணும் 39 தொகுதிகளின் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தயாரித்து, அதனை தேசிய தலைமைக்கு அனுப்பியிருக்கிறது. அந்த பட்டியலை திமுக தலைமையிடம் சமர்பிக்க தேசிய தலைமையும் சம்மதம் தெரிவித்திருக்கிறது.

முதல்வரை சந்திக்க நேரம் கேட்ட காங்கிரஸ்

இதனடிப்படையில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் தலைமை நேரம் கேட்டுள்ளதாக சத்தியமூர்த்திபவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்காக, காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தமிழ்நாடு வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திமுக தரப்பில் இருந்து உறுதியான முடிவு வராததால் கே.சி.வேணுகோபால் தமிழ்நாடு வருகையும் தள்ளிப்போயிருக்கிறது.

ஏற்கனவே, தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியபோது, திமுக தரப்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்ட பின்னர், தொகுதிகள் குறித்து பேசிக்கொள்ளலாம் என முதல்வர் தெரிவித்திருந்தார். இதுவரை திமுகவில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படாத நிலையில், அந்த குழு அமைக்கப்பட்ட பிறகே காங்கிரஸ் கட்சியினர் நேரம் கொடுக்கப்படும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் தர வேண்டாம் - போர்கொடி தூக்கும் திமுக தலைகள்

இந்த முறை 2வது முறையாக ஆட்சியை தக்க வைத்து வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்று திமுக கடுமையாக முயற்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு அதிக சீட் கொடுப்பது திமுகவிற்கே ஆபத்தாக முடியும் என சில திமுக மூத்த தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியில், சில தலைவர்கள் திமுகவிற்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், அவர்களுக்கு கூடுதல் சீட் கொடுப்பது என்பது தேர்தல் களத்தில் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு அதே 25 தொகுதிகளை மட்டுமே இந்த முறை ஒதுக்க வேண்டும் என்றும் கூடுதல் தொகுதிகளை தர வேண்டாம் எனவும் திமுக மூத்த தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால், சிலரோ 30 சீட் வரை கொடுக்கலாம் என்று கூறியிருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget