மேலும் அறிய

Manickam Tagore vs DMK: மீண்டும் திமுகவை வெறுப்பேற்றிய மாணிக்கம் தாகூர்- இன்று என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?

Manickam Tagore vs DMK: திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என் காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெருங்கும் தேர்தல்- திமுக கூட்டணியில் மோதல்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் தற்போது வரை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக்,மமக, உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பிடித்துள்ளது. இந்த கட்சிகளோடு இணைந்து தேர்தலை எதிர்கொள்ள திமுக திட்டமிட்ட நிலையில், இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஆரம்பத்திலேயே ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன் வைத்தது. இதனால் அதிருப்தி அடைந்த திமுக, கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு தொடர்பாக  பேச்சுவார்த்தை நடத்த எந்தவித குழுவும் அமைக்கவில்லை,

ஆட்சியில் பங்கு- மாணிக்கம் தாகூர்

அதேநேரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என திமுகவிற்கு எதிராக தனது கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்தார். மேலும் காங்கிரஸ் நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தியும் தவெக தலைவர் விஜய்யை பாராட்டியும், தமிழக அரசின் செயல்பாட்டை விமர்சித்தும் சமூகவலைதளத்தில் பதிவு செய்து வந்தார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா.? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு ஏற்ப திமுக- காங்கிரஸ் கட்சியினர் சமூகவலைதளத்தில் மோதி வந்தனர்.

மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை.?

இதனையடுத்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்த ராகுல் காந்தி மற்றும் கார்கே, கூட்டணி தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என எச்சரித்திருந்தனர். ஆனால் அடுத்த சில தினங்களிலேயே மீண்டும் இரு தரப்பும் மோதிக்கொண்டது. ஒரு கட்டத்தில் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க முடியும் என திமுக காங்கிரஸ் தலைமையிடம் உறுதியாக தெரிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் நடைபெறும் திமுக- அதிமுக கூட்டணி மோதல் தொர்பாக தனது அறிக்கையை செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைமையிடம் சமர்பித்தார்.

இதனையடுத்து நேற்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி தொடர்வதாகவும் கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாணிக்கம் தாகூர் பேச்சுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று அச்சமில்லை.. அச்சமில்லை என பதிவு செய்திருந்த மாணிக்கம் தாகூர், இன்று தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேன்னென்று நினைத்தாயோ என மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

நான் வீழ்வேன்னென்று நினைத்தாயோ

இதில் நான் வீழ்வேன்னென்று நினைத்தாயோ என்ற வார்த்தையை முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிட்டுள்ளார். எனவே திமுகவை சீண்டும் வகையில் மாணிக்கம் தாகூர் மீண்டும் வெளியிட்டுள்ள இந்த பதிவு திமுகவை அதிருப்தி அடைய செய்துள்ளது. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ள  தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என தெரியவரும்.

தலைப்பு செய்திகள்

TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget