மேலும் அறிய

‛தங்கமல்ல தகரச் செல்வன்...’ -ஓபிஎஸ்: ‛காலில் விழுவார் பாருங்க’ - தங்கத் தமிழ்செல்வன்! தேனியில் கருத்து மோதல்!

ஓபிஎஸ் கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுகவின் தங்கத் தமிழ்செல்வன் கருத்து தெரிவித்து பரபரப்பான அரசியல் சூழலை உருவாக்கியுள்ளனர்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகரில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. அரசை கண்டித்தும், தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.  ஆர்ப்பாட்ட முடிவில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தபோது.

‛தங்கமல்ல தகரச் செல்வன்...’ -ஓபிஎஸ்: ‛காலில் விழுவார் பாருங்க’ - தங்கத் தமிழ்செல்வன்! தேனியில் கருத்து மோதல்!

நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தின் போது, 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களை கூறி மக்களிடம் வாக்கு கேட்டோம். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகளை கூறினர்.  தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் தரப்பட்டன. மக்கள் அதை நம்பி வாக்களித்தனர். அ.தி.மு.க.வை விட வெறும் 3 சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க. ஆட்சி அமைத்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற ஜனநாயக முறைப்படி, கடந்த 4½ ஆண்டுகளாக நாங்கள் அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகிறோம்.  அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒரு தனிப்பட்ட குடும்பமோ, தனி நபரோ ஆதிக்கம் செலுத்த முடியாத ஜனநாயக முறையை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த நிலை தொடரும் எனவும் கூறினார்.

‛தங்கமல்ல தகரச் செல்வன்...’ -ஓபிஎஸ்: ‛காலில் விழுவார் பாருங்க’ - தங்கத் தமிழ்செல்வன்! தேனியில் கருத்து மோதல்!

சசிகலாவை அ.தி.மு.க. பொதுக்குழு தான் நீக்கியது. யார் எந்த முயற்சியை எடுத்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது. முல்லைப்பெரியாறு ஆற்றுப்படுகையில் இருக்கிற விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாடு கருதி விதிகளுக்கு உட்பட்டு, தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வரும் நிலையில் மின் இணைப்பை துண்டிப்பது கொடுமையான செயல். இந்த நிலை தொடர்ந்தால் அ.தி.மு.க. போராட்ட களத்தில் இறங்கும்.

தன்னை வளர்த்த கட்சிக்கு துரோகம் செய்தவர் தகரச் செல்வன்(தங்கதமிழ்செல்வன்). ஜெயலலிதாவுக்கு ஒரு இடர் வந்தபோது நான் முதலமைச்சராக இருந்தேன். மீண்டும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடும் சூழல் வந்தபோது, எம்.எல்.ஏ. பதவியை தங்கதமிழ்செல்வன் ராஜினாமா செய்ய மறுத்தார். விடிய, விடிய, அவரிடம் பேசி நாங்கள் அவரை ஒப்புக் கொள்ள வைத்தோம். தன்னை ஆளாக்கிய கட்சிக்கு நன்றியில்லாத தகர செல்வன்(தங்கதமிழ்செல்வன்) என அடிக்கபடி தகரம் என்கிற வார்த்தையை உபயோகித்தார். இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் மீன் மார்க்கெட் மற்றும் அம்மா உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளரிடம் பேசுகையில்

‛தங்கமல்ல தகரச் செல்வன்...’ -ஓபிஎஸ்: ‛காலில் விழுவார் பாருங்க’ - தங்கத் தமிழ்செல்வன்! தேனியில் கருத்து மோதல்!

‛‛அதிமுக கட்சியினை வழிநடத்த தெரியாமல் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தங்களது சண்டை சச்சரவு தீர்த்துக் கொள்ளவே நேற்று முன்தினம் மோடியை சந்தித்து தங்களது பிரச்சினைகளை தீர்த்து வருகின்றனர். தங்களது கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தெரியாத இவர்கள் இருவரும் அதிமுக கட்சியை வழிநடத்த தகுதியற்றவர்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

66 கோடி ஊழல் செய்ததாக ஜெயலலிதா மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் 500 கோடி ரூபாய் செலவழித்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார் தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலிலும் போடி சட்டமன்ற தொகுதியில் ஓபிஎஸ் 100 கோடி ரூபாய் செலவழித்து வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் மீது யார் வழக்கு தொடர்வது? இவர்களை யார் விசாரணை செய்வது? இதற்கெல்லாம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை விரைவில் தண்டனை பெற்றுத் தருவது உறுதி என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

‛தங்கமல்ல தகரச் செல்வன்...’ -ஓபிஎஸ்: ‛காலில் விழுவார் பாருங்க’ - தங்கத் தமிழ்செல்வன்! தேனியில் கருத்து மோதல்!

கடந்த 10 ஆண்டுகளாக ஓ பன்னீர்செல்வம் தனது தொகுதிக்கு செய்யாத திட்டங்களை பொதுமக்களிடம் கோரிக்கை வைத்ததால் நான் அவர்களுக்கு நேரில் சென்று அவரது கோரிக்கையை நிறைவேற்றி வருகிறேன் நான் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஓபிஎஸ் கூறுவதற்கு அவருக்குத் தகுதி இல்லை. போடி தொகுதியில் பொதுமக்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் கோரி அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி வருகிறேன் என்னை பொறுத்தவரை பொது மக்கள்தான் அரசு அவர்களுக்கு மாற்றுவதே எனது முழு நேர கடமை இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தமிழக முதல்வரிடம் எந்த ஒரு புகார் செய்தாலும் அவரை நான் சந்திக்க தயாராக உள்ளேன் எனவும் கூறினார்.

மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை அவருக்கு நான் எந்த விதத்திலும் துரோகம் இழைத்தது கிடையாது அதன் பின்பாக வந்த எடப்பாடியின் ஆட்சியில் சரியான நிர்வாகம் இல்லாததால் ஒரு விவஸ்தை கெட்ட கட்சியில் போய் சேர்ந்தேன். அவர்களாலும் அதிமுக அரசை காப்பாற்ற முடியாது என்பதால்தான் ஒரு ஆண்மை நிறைந்த செயல்திறன்மிக்க மு க ஸ்டாலின் தலைமையிலான கட்சியில் சேர்ந்து இன்றைக்கு அவரது ஆட்சியை தமிழகத்தில் பொற்கால ஆட்சியாக நடைபெற்று வருகிறது.

‛தங்கமல்ல தகரச் செல்வன்...’ -ஓபிஎஸ்: ‛காலில் விழுவார் பாருங்க’ - தங்கத் தமிழ்செல்வன்! தேனியில் கருத்து மோதல்!

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் காலத்திலேயே ஓ பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தின் காலில் விழுந்து சொத்து சம்பாதித்தவர் . எடப்பாடி பழனிச்சாமியும் அவ்வாறுதான். அங்குள்ள அமைச்சர்கள் அனைவருமே அவ்வாறுதான். கூனிக்குறுகி காலில் விழுந்து சொத்து சேர்த்தனர். தங்களது பதவியை தக்க வைத்துக் கொண்டனர். ஆனால் நான் யாருக்கும் அடிபணிந்து கூனிக்குறுகியோ நடந்தது கிடையாது எனவும் கூறினார். சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றினால் ஓ பன்னீர்செல்வம் குடும்பம் சசிகலா காலில் விழுவது உறுதி.

இதே ஓ பன்னீர்செல்வம் தான் ஒரு தொகுதியில் சசிகலா மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என்று கேள்வி எழுப்பி அதற்கு அதனை கட்சியின் பொதுக்குழு தான் முடிவெடுக்கும் என்று கூறினார். அதற்கு ஆண்மை இருந்தால் அன்றைக்கே தன்னால் முடியாது என்று கூறியிருக்கலாம் என்று சொல்ல மறுத்த ஓபிஎஸ் இன்றைக்கு சசிகலாவின் தனிப்பட்ட குடும்ப ஆட்சியை கைப்பற்ற முடியாது என்று கூறி வருகிறார். ஆனால் விரைவில் சசிகலா அதிமுக கட்சியை கைப்பற்றுவார் ஓபிஎஸ் குடும்பமே அவர் காலில் விழுவது என்பது உறுதி எனவும் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget