மேலும் அறிய

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டம் - தமிழ்நாடு மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஜூன் 16-ந் தேதி கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என திமுக மாணவர் அமைப்பு உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பட்டமளிக்காமல், தமிழ்நாடு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பாதிக்கும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு மாணவர் இயக்கங்களில் கூட்டமைப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டமளிக்காமல் இருந்து வரும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஜூன் 16-ந் தேதி கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என திமுக மாணவர் அமைப்பு உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, நிரூபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது :

பாஜகவின் சிறப்புத் தலைவர்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறும் போது, தமிழ்நாட்டில் உள்ள அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கலந்துக் கொள்வர். ஆனால், தமிழ்நாட்டு பாஜகவின் சிறப்புத் தலைவர் போல செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தமிழ்நாட்டிலுள்ள அறிஞர்களைத் தவிர்த்து, வட இந்திய சனாதன சித்தாந்தவாதிகளை அழைத்து பட்டமளிப்பு விழா நடத்திவிட வேண்டுமென்று விருப்பம் கொண்டுள்ளார்.

பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்க முடியவில்லை

இதனால், தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற 12 பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறாமல் 9,29,142 மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்காமல் தனது சட்டப்பூர்வமான கடமையை செய்யத் தவறியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்ற நாளிலிருந்து அவரது அலட்சியம் மற்றும் சனாதனப் போக்கினால், இதுநாள் வரையிலும் பல்கலைக் கழகங்களில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்க முடியவில்லை. பட்டபடிப்பு சான்றிதழ் பெற முடியாததால், உயர்கல்வி பயிலவும் மற்றும் வேலைவாய்ப்பு பெறமுடியாமலும், ஆராய்ச்சி மேற்படிப்பு பயிலவும் முடியாமல் மாணவர்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும், முனைவர் பட்டத்தை பெற்றவர்கள், தங்களது ஆய்வு அறிக்கையினை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தேடல் குழு

இந்திய அளவில், தமிழ்நாட்டு மாணவர்கள் உயர்கல்வி பெறுகின்ற நிலையினை சிதைப்பதற்கும், அவர்களுடைய வேலைவாய்ப்பு, தொழில் முனைதல் உள்ளிட்ட முன்னேற்றத்தை சிதைப்பதற்கும்,  பாஜக. அரசின் தமிழ்நாட்டின் ஏஜெண்டாக உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி உள்நோக்கத்துடன் செய்கின்ற மாபெரும் மாணவர் விரோத சதி திட்ட செயலுக்கு மாணவர் சமுதாயமும், மக்களும் பெரும் கண்டன குரல் எழுப்புகின்றனர். மேலும், பல்கலைக்கழகங்களை சட்டப்பூர்வமாக அமைப்பது, நிர்வகிப்பது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். அதனடிப்படையில், ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசின் உயர்கல்வித் துறையால், தேடல் குழு (Search Committee) ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி ஒருவர், மாநில அரசின் பிரதிநிதி ஒருவர், பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் ஒருவர் (சிண்டிகேட்) என மூவர் இடம் பெறுவர். ஆளுநரின் பிரதிநிதி தேடல் குழுவின் தலைவராகச் செயல்படுவார். தேடல் குழு பரிந்துரை செய்யும் 3 நபர்களில் இருந்து ஒருவரைத் ஆளுநர் துணைவேந்தராக நியமிப்பார். இந்த நடைமுறையின்படிதான் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

மானியக்குழு தரப்பிலிருந்து ஒருவரை

ஆனால், 'இந்திய அரசியல் சாசனத்தின்படி நடப்பேன்' என்று உறுதிமொழி அளித்து பதவி ஏற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில், பல்கலைக் கழக மானியக்குழு தரப்பிலிருந்து ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளார். மாநில அரசின் உரிமைக்கும், பல்கலைக்கழகத்தின் சுயாட்சி தன்மைக்கும் எதிராக, ஒன்றிய அரசின் முழு ஆளுகைக்கு பல்கலைக்கழகங்களை கொண்டு செல்ல ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் எடுத்திருக்கும் ஒரு பெரும் சதி திட்டமாகவே மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு இதை கருதுகிறது. இத்தகைய சட்டவிரோதமான ஒழுங்கீன போக்கினை வன்மையாக கண்டிக்கிறது. இதனால், கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல், பல்கலைக்கழக நிர்வாகம் முடங்கி, செயலற்றுப் போகும் நிலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உருவாக்கி உள்ளார். இவ்வாறு, பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் தேவையற்ற காலத்தாமதம் செய்வதும், அதில் ஒன்றிய அரசின் தலையீட்டை வலிந்து திணிப்பதும், அவ்வாறு துணைவேந்தர்களை நியமித்தாலும் அவர்கள் சனாதன சித்தாந்தத்தை உடையவர்களாக தேர்ந்தெடுத்து நியமிப்பது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் செயல்படுவது,

சுயாட்சி தன்மையை முடக்குகின்ற வகையில்

தமிழ்நாட்டின் கல்வி, சமூகநீதி, இருமொழிக் கொள்கை, மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றின் மீது நடத்தப்படும் கொடுந்தாக்குதலாகும்.இவற்றையெல்லாம் முன்பே உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த 25.04.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினார். ஆனால், அந்த மசோதாகளுக்கு இதுநாள் வரையிலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இதுவரையில் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்து தனது வன்மத்தை இக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்ற கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்காமல் கடமைத் தவறிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கண்டித்தும், உடனடியாக பட்டப்படிப்பு சான்றிதழை வழங்க வலியுறுத்தியும்,  பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு விளம்பரத் தூதுவராகச் செயல்படுவதுடன், தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட பல்கலைக்கழகங்களின் சுயாட்சி தன்மையை முடக்குகின்ற வகையில் அரசியல் சட்டவிதிகளுக்கு முரணாக, அத்துமீறி செயல்பட்டு வருவதன் மூலம் ஒழுங்கின்மை போக்கினை கடைபிடித்து வரும் தமிழ்நாடு பா.ஜ.க.-வின் சிறப்புத் தலைவரைப் போல செயல்படும், ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை கண்டித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில், பல்கலைக் கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளை உடனே ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தியும் வரும் 16.06.2023 அன்று, காலை 09.00 மணியளவில் சென்னை, ஆளுநர் மாளிகைக்கு அருகிலுள்ள சின்னமலை சாலை சந்திப்பில், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FSO - TN) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தோழர்கள், முற்போக்கு சிந்தனையுடைய மாணவர், இளைஞர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Embed widget