AIADMK Issue: ஓபிஎஸ், இபிஎஸ் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? இபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்யகோரி நீதிபதி உத்தரவு!
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மற்ற இடைக்கால நிவாரணம் தொடர்பாக தனி நீதிபதியை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா..? பதவி காலாவதியாவில்லை எனில் தலைமைக்கழக நிர்வாகிகள் எப்படி பொதுக்குழுவை அறிவிக்கலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு இபிஎஸ் தரப்பில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும்.
பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபி எஸ் உள்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கடந்த பொதுக்குழுவின் நீட்சி அல்ல இது. இது சிறப்பு பொதுக்குழு. இதை பதில் மனுவாக தாக்கல் செய்கிறோம். பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும். ஓபி எஸ் மனு விசாரணைக்கு உகந்ததா என ஆய்வு செய்ய வேண்டும். கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். இன்றைய நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ பதவிகள் இல்லை. கட்சி விதிகளை திருத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்குதான் உள்ளது என தெரிவித்தனர்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மற்ற இடைக்கால் நிவாரணம் தொடர்பாக தனி நீதிபதியை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணம் குறித்து பதிலளிக்க வேண்டும்.. முறையாக எப்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டது? விளக்கம் அளிக்க இப்.எஸ் தரப்புக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என்பது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்யவும் இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்டனர். இ.பி. எஸ் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு நாளை தள்ளி வைக்கப்பட்டது.
ஒற்றைத் தலைமை விவகாரம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி கே பழனிசாமி தரப்பினர், ‘ஒற்றைத்தலைமை வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதன் ஒரு பகுதியாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதியிலேயே வெளியேறினர்.
இதனால், தற்போது வரை அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பரபரப்பை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் ஈபிஎஸ் தரப்பில் அதிக எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் ஆதரவு இருப்பதால் பொதுக்குழுவை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்