TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய் திட்டமிட்டு களத்தில் இறங்கியுள்ள நிலையில், புதுச்சேரியை குறிவைத்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் மற்றும் புதுவை தயாராகி வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அரசியல் களத்தில் குதித்துள்ள விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி, 2 மாநில மாநாட்டை நடத்தி முடித்தார். அடுத்ததாக மக்களை சந்திக்கும் வகையில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல்லில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். அடுத்ததாக கரூரில் நடைபெற்ற கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது.
விஜய்யோடு ரங்கசாமி நெருக்கம்
சுமார் 2 மாதங்களுக்கு மேலாக அமைதி காத்து வந்த தவெக, மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டது. ஆனால் தமிழகத்தில் எந்த இடத்திலும் தவெக கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தவெக, புதுச்சேரியை தேர்வு செய்தது. புதுச்சேரி மாநில முதலமைச்சராக உள்ள ரங்கசாமி, தவெக தலைவர் விஜய்க்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். பல முறை நேரில் சந்தித்தும் பேசியும் உள்ளார். எனவே வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவை கழட்டி விட்டு விட்டு தவெக மற்றும் ரங்கசாமி கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு உள்ளது.இந்த நிலையில் தான் தவெக கூட்டம் நடத்த தமிழகத்தில் அனுமதி கிடைக்காத நிலையில், புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
அனுமதி கொடுத்த ரங்கசாமி
புதுச்சேரி காவல்துறையும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. இந்த நிலையில் தான் புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஜய், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை புகழ்ந்து தள்ளிய நிலையில், ரங்கசாமியோடு கூட்டணி ஆட்சி அமைத்துள்ள பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அதே நேரம் முன்னதாக கூட்டத்தில் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரியில் தவெக ஆட்சி கண்டிப்பாக அமைக்கும் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தளபதி 2026ஆம் ஆண்டில் கண்டிப்பாக வருவார். அதே போல புதுச்சேரி மாநிலத்திலும் கண்டிப்பாக தமிழக வெற்றிக்கழக ஆட்சி இருக்கும் என பேசியிருந்தார்.
புதுச்சேரியில் தவெக ஆட்சி
தமிழகத்தில் விஜய் முதலமைச்சராக ஆகும் பட்சத்தில் புதுச்சேரியில் தவெக ஆட்சி அமைத்தால், தான் முதல்வர் ஆகிவிடலாம் என புஸ்ஸி ஆனந்த் திட்டமிட்டு வருகிறார். எனவே புதுச்சேரியில் தவெக ஆட்சி அமைக்கும் என பேசியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ரங்கசாமியோடு கூட்டணி அமைக்க விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் தவெக ஆட்சி அமைக்கும் என புஸ்ஸி ஆனந்த் பேச்சால் தவெக தலைவர் விஜய் திடீரென டென்சன் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.





















