மேலும் அறிய

Vijay Makkal Iyakkam: அண்ணாமலை பயணத்திற்கு ஆதரவு கொடுத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்.. கடுப்பான புஸ்ஸி ஆனந்த்..

நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை நிர்வாகிகள் சந்தித்த விவகாரத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிரடியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அண்ணாமலை நடைபயணம் 

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மக்களை நேரில் சந்திக்கும் பொருட்டு தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ராகுல் காந்தி, பவன் கல்யாண் தொடங்கி பலரும் நடைபயணம் மேற்கொண்டனர். அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் மாநிலம் தழுவிய பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். 

கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தொடங்கிய நடைபயணம் நேற்று மதுரையில்  தொடர்ந்தது. இந்த பயணத்தில் ஏராளமான மக்கள் அண்ணாமலையை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். ஏராளமான பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இப்படி சென்று கொண்டிருக்கும் அண்ணாமலையில் நடைபயணத்தில் நேற்று எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது.

விஜய் மக்கள் இயக்கத்தினர் பங்கேற்பு 

அதாவது இந்த பயணத்தில் விஜய் ரசிகர்கள் பலரும் மக்கள் இயக்க கொடியோடு கலந்து கொண்டனர். அதேபோல் விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்புத் தலைவர் சி.கே.பத்ரி சரவணன் உள்ளிட்டோரும் அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்றனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது மக்கள் இயக்கத்தினர் வேறு கட்சிகளில் இருக்கக்கூடாது என விதி உள்ளது. இப்படியான நிலையில் நேரடியாக பாஜகவின் நிகழ்வுக்கு மக்கள் இயக்கத்தினர் சிலர் ஆதரவு கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிரடியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார். இதனால் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?

பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?

Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்

DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு

"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?

Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்

Embed widget