மேலும் அறிய

தோல்விக்கு அதிமுக தான் காரணம்; சி.வி.சண்முகம் பேச்சுக்கு பாஜக எதிர்வினை! முடிவுக்கு வருகிறதா பாஜக-அதிமுக கூட்டணி?

பாஜக கூட்டணி தான் அதிமுக தோல்விக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியதற்குகு, ‛உங்களால் தான்’ தோற்றோம் என பாஜக தரப்பில் எதிர்வினை ஆற்றப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‛நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டு குறைந்ததற்கு பாஜக கூட்டணி தான் காரணம் என கூறியிருந்தார். அதுமட்டுமின்றி தனக்கு பாஜக கூட்டணியால் ஏற்பட்ட இழப்பு குறித்தும் அவர் பேசியிருந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் எதிர்வினை ஆற்றப்பட்டுள்ளது. பாஜக மூத்த நிர்வாகி கே.டி.ராகவன் தனது டுவிட்டரில் சி.வி.சண்முகத்திற்கு பதிலடி தந்துள்ளார். 

 

‛உங்களால் தான்’ என்ற எண்ணம் எங்களுக்கும் உண்டு என்று பதிவிட்ட அவர், சிவி சண்முகத்தின் பேச்சு தொடர்பான நாளிதழ் செய்தியையும் அதில் பகிர்ந்துள்ளார். நேரடியாகவே, அதிமுகவால் தான் பாஜக தோற்றது என முன்னாள் அமைச்சரின் பேச்சை சுட்டிக்காட்டி கே.டி.ராகவன் தெரிவித்துள்ள கருத்து, அதிமுக-பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என்கிற கேள்வி எழுந்த நிலையில், தற்போது மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம்-கே.வி.ராகவனின் வார்த்தைப் போர், கூட்டணி தொடர்பான குழப்பத்தை உறுதி செய்துள்ளது. 

முன்னதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய நிகழ்ச்சியின் விபரமும், பேச்சும் இதோ:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அருகே குருவம்மாபேட்டை கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.கவின்  மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை ஏற்றதோடு கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். அப்பொழுது,  நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத்தேர்தலில், மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளைக்கொடுத்து தி.மு.க வினர் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும் மக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை எனவும் சந்தர்ப்ப சூழ்நிலை தான் திமுக ஆட்சிக்கு வர காரணமாக அமைந்தது என தெரிவித்துள்ளார். இதோடு அதிமுக,  பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தோம். இல்லையென்றால் 3 வது முறையாக தமிழகத்தில் ஆட்சியினை அமைத்திருப்போம் என பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய அவர்,  பாஜக வுடன் கூட்டணி அமைத்ததால் தான் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் நமக்கு கிகை்கவில்லை என தெரிவித்தார். மேலும் சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக மீது எந்த கோபமும், வருத்தமும் இல்லை. ஆனால் இவர்கள் பா.ஜ.க வின் கொள்கை ரீதியான கருத்தில் முரண்பட்டு இருந்தார்கள். இதனால் தான் அ.தி.மு.க பாஜகவுடன் வைத்த கூட்டணியால் மிகப்பெரிய இழப்பினை சந்திக்க நேரிட்டது என தெரிவித்துள்ளார்.  குறிப்பாக விழுப்புரம் தொகுதியி்ல சுமார் 20 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளது. இதில் 18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகர்ப்பகுதியில் உள்ளது. ஆனால் 300 வாக்குகள் கூட எனக்கு கிடைக்கவில்லை எனவும், 16 ஆயிரம் வாக்குகள் நகரத்தில் குறைந்திருந்தாலும் கிராமங்களில் வாக்குகளை பெற முடிந்தது என கூறிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இதே நிலை தான் தமிழகம் முழுவதும் நடந்தது என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
Embed widget