H Raja : பொன்னியின் செல்வனை வெற்றிமாறன் விமர்சித்தது ஏன்...? - எச்.ராஜா சொன்ன காரணம் இதுதான்..!
சேலத்தில் பேசிய எச்.ராஜா இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
![H Raja : பொன்னியின் செல்வனை வெற்றிமாறன் விமர்சித்தது ஏன்...? - எச்.ராஜா சொன்ன காரணம் இதுதான்..! BJP H.Raja critice speech about movie director vetrimaaran ponniyin selvan issue H Raja : பொன்னியின் செல்வனை வெற்றிமாறன் விமர்சித்தது ஏன்...? - எச்.ராஜா சொன்ன காரணம் இதுதான்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/20/28ab33375d84f539efb0a6327a14e5301668936826804189_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாவட்டம் மரவனேரி பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நாட்டின் ஒருமைப்பாடு சட்டத்தின் வரைமுறையால் ஏற்படுத்தப்பட்டது இல்லை. காசிக்கும் தமிழகத்திற்கும் பல காலமாக கலாச்சாரம் சார்ந்து ஒற்றுமை உள்ளது. காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் ஒற்றுமையை இருக்கும் வரை மதவிரோதிகளால் பிரிக்க முடியாது. காசிக்கும் தமிழகத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஈ.வெ.ரா. சொன்னதை நமது ஆட்கள் கடைபிடிப்பது நாய்கள், விலங்குகளிடம் மட்டும் தான். ஆங்கிலத்தில் பேசு.
பாட்டன், முப்பாட்டன் சொல்லிக் கொடுத்ததை மறந்துவிடு என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டு மக்களின் மனதை கேவலப்படுத்தி உள்ளனர். அசிங்கப்படுத்தி உள்ளனர். மொழி வெறுப்பை மக்கள் மனதில் திராவிடம் ஆட்சி புகுத்தியுள்ளது. இந்திய குடும்பமொழி என்பது தான் சரி, ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதல்ல.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்த போது இயக்குனர் வெற்றிமாறன் விமர்சனம் செய்ததற்கு காரணம் வயிற்றெரிச்சல். அடுத்து வரும் நந்திவர்மன் படத்திற்கு உடலே எரியும் என்று நினைக்கிறேன். திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் முதல்வர் ஆட்சி செய்வதற்கு இருப்பதற்கு தகுதி இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு எப்படியாவது இந்தியா உடையாதா? என்று நப்பாசை உள்ளது.
திருமாவளவன் எல்லை மீறுகிறார். கண்டிக்கத்தக்கது. அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லை மீறி சென்று கொண்டிருக்கும் திருமாவளவன் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.
பால்வளத்துறை அமைச்சர் :
பால் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, சாதாரண மக்களுக்கு பாதிப்பில்லை என்று கூறுகிறார். பால் வலத்துறை அமைச்சர் நாசர், முட்டாள் சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர் என்றும்,
உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் திரைப்படத்தில் திருமணம் செய்ய நாயகனுக்கு போட்டி வைப்பது போன்று, நாசர் ஆறு மாதமாவது மாடு மேய்க்க அனுப்பி வைக்க வேண்டும், மாட்டை பராமரிக்கும் செயலை செய்தால்தான் பால் விலை உயர்வு குறித்து அப்படியாவது தெரிய வரும். தகுதியற்றவர் அமைச்சராக உள்ளார். ஜெயக்குமார் கூறியது அவருடைய கருத்து. பா.ஜ.க.வை பொறுத்தவரை மக்களின் பிரச்சினையாவது எதுவாக இருந்தாலும் பாஜக மக்களுக்காக களத்தில் உள்ளது. தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சக அமைச்சர்கள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார் அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் சொல்வது உண்மையாக இருக்கலாம் என்றார்.
டாஸ்மாக்கில் நடக்கின்ற ஊழலை பகிரங்கமாக விசாரிக்க வேண்டும், குறிப்பிட்ட அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும், அப்போதுதான் அந்த விசாரணை சரியாக இருக்கும். டாஸ்மாக்கில் வரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, துறை அமைச்சர் பதவி விலகவேண்டும் அதன் பிறகு விசாரணை நடத்த வேண்டும் என்றும் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)