மேலும் அறிய

Nainar Nagendran: விஸ்வரூபம் எடுக்கும் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி கைக்கு போகும் வழக்கு! சிக்கலில் நயினார்?

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதாக கூறப்படும் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் கார் ஓட்டுநர் சதீஷ் மற்றும் உதவியாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி ரூபாய் விவகார வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

ரூ. 4 கோடி பறிமுதல்:

ஏப்ரல் 6-ம் தேதி சென்னை தாம்ரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லபட்ட ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ், பெருமாள், நவீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர் நயினார் நாகேந்திரனுக்கு தெரிந்தவர் என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு நேரில ஆஜராக வேண்டும் என்று  தாம்பரம் காவல் நிலையம் சம்மன் அனுப்பியது. 

நயினார் நாகேந்திரன் இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க பத்து நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தாம்பரம் காவல்துறை அலுவலகம் சார்பில் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மே-2ம் தேதி ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டது

”பணம் என்னுடையது இல்லை”:

தியாகராயர் நகர் பா.ஜ.க. சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக பேசுகையில், ” மே-2 ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்திற்கு நேரில் வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். இது என்னை முழுக்க முழுக்க டார்கெட் செய்யப்பட்டதாகும். இதை அரசியல் சூழ்ச்சி என்றுதான் சொல்வேன். உங்களுக்கே தெரியும். தழிழ்நாட்டில் இதுவரை எத்தனை கோடி ரூபாய் பிடித்திருக்கிறார்கள். இதுவரை 200 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்திருக்கிறார்கள். யாரோ ரூ.4 கோடி பணம் வைத்திருந்ததற்காக என் பெயரையும் சேர்த்துள்ளனர். 200 ரூபாய் கோடி பணம் பறிமுதல் செய்திருக்கிறார்கள். விவசாயிகள், வியாபாரிகள் தொழிலுக்கு வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்திருக்கிறார்கள். இந்தப் பணம் என்னுடையது இல்லை. எனக்கும் பிடிக்கப்பட்ட பணத்திற்கு எந்த தொடர்பும் இல்லை.

சிபிசிஐடி-க்கு மாற்றம்:

அதோடு, யாரோ ஒருவர் என்னுடைய பெயரை பயன்படுத்தியதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். கைது செய்யப்பட்டவர்கள் எனக்குத் தெரிந்தவர்கள்தான். ஆனால் பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. காவல்துறையினர் மிரட்டி அவர்களை சம்மதிக்க வைத்திருக்கலாம். எனக்கு நிறைய பேரை தெரியும். காவல் துறையினர் அவர்கள் கடமையை செய்கின்றனர். நான் முழு ஒத்துழைப்பை தருவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதனால் மேலும் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs CSK LIVE Score: களமிறங்கும் கில் படை; டாஸ் வென்ற சென்னை பந்து வீச முடிவு!
GT vs CSK LIVE Score: களமிறங்கும் கில் படை; டாஸ் வென்ற சென்னை பந்து வீச முடிவு!
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
WhatsApp: உங்க வாட்ஸ் அப் மாறியிருக்கிறதா? புதிய அப்டேட் வந்தாச்சு - என்னன்னு தெரியுமா?
WhatsApp: உங்க வாட்ஸ் அப் மாறியிருக்கிறதா? புதிய அப்டேட் வந்தாச்சு - என்னன்னு தெரியுமா?
MS Dhoni: கடைசியாக களம் இறங்கும் தோனி..காரணம் சொன்ன ஸ்டீபன் பிளம்மிங்!விவரம் உள்ளே!
MS Dhoni: கடைசியாக களம் இறங்கும் தோனி..காரணம் சொன்ன ஸ்டீபன் பிளம்மிங்!விவரம் உள்ளே!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar Chennai Travel  : மீண்டும் வேனில் பயணமா? கதறும் சவுக்கு சங்கர்! கோவை To சென்னை!Rahul Travel Govt Bus : ஸ்டாலின் ஸ்டைலில் ராகுல்! ஒன்றுகூடிய பெண்கள்! அரசு பேருந்தில் பயணம்!TN 10th Result 2024  : 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு.. எந்த மாவட்டம் முதலிடம்? முழு விவரம்Rahul Gandhi Slams Modi  :”மோடி-ன் பொய் வாக்குறுதி இளைஞர்களே நம்பாதீர்கள்” ராகுல்  பகீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs CSK LIVE Score: களமிறங்கும் கில் படை; டாஸ் வென்ற சென்னை பந்து வீச முடிவு!
GT vs CSK LIVE Score: களமிறங்கும் கில் படை; டாஸ் வென்ற சென்னை பந்து வீச முடிவு!
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
WhatsApp: உங்க வாட்ஸ் அப் மாறியிருக்கிறதா? புதிய அப்டேட் வந்தாச்சு - என்னன்னு தெரியுமா?
WhatsApp: உங்க வாட்ஸ் அப் மாறியிருக்கிறதா? புதிய அப்டேட் வந்தாச்சு - என்னன்னு தெரியுமா?
MS Dhoni: கடைசியாக களம் இறங்கும் தோனி..காரணம் சொன்ன ஸ்டீபன் பிளம்மிங்!விவரம் உள்ளே!
MS Dhoni: கடைசியாக களம் இறங்கும் தோனி..காரணம் சொன்ன ஸ்டீபன் பிளம்மிங்!விவரம் உள்ளே!
Star Movie Box Office: முதல் நாளிலேயே எகிறும் வசூல்.. சொந்த ஊரில் கலக்கும் கவின்: ஸ்டார் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!
Star Movie Box Office: முதல் நாளிலேயே எகிறும் வசூல்.. சொந்த ஊரில் கலக்கும் கவின்: ஸ்டார் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!
Arvind Kejriwal Bail: சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்! உற்சாக வரவேற்பு தந்த ஆம் ஆத்மி தொண்டர்கள்!
Arvind Kejriwal Bail: சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்! உற்சாக வரவேற்பு தந்த ஆம் ஆத்மி தொண்டர்கள்!
Watch Video: கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கிடைத்த புதிய ஜிம் பார்ட்னர்..யாருன்னு நீங்களே பாருங்க!
Watch Video: கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கிடைத்த புதிய ஜிம் பார்ட்னர்..யாருன்னு நீங்களே பாருங்க!
EXCLUSIVE: ”நடுரோட்ல நிக்கற மாதிரி இருக்கு”- நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மாறிய வினாத்தாள்- தூத்துக்குடியில் சர்ச்சை
”நடுரோட்ல நிக்கற மாதிரி இருக்கு”: நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மாறிய வினாத்தாள்- தூத்துக்குடியில் சர்ச்சை
Embed widget