BJP Candidate List: பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: விருதுநகரில் ராதிகா!
BJP Candidate 4th List 2024 Lok Sabha Election: 18ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி வருகிறது.
18ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி வருகிறது.
அதன்படி, பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வட சென்னையில் வழக்கறிஞர் பால் கனகராஜ், பொள்ளாச்சியில் வசந்தராஜன் உள்ளிட்டோர் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக, திருவள்ளூரில் பொன் கணபதி, திருவண்ணாமலையில் அஸ்வத்தாமன், நாமக்கல்லில் ராமலிங்கம், திருப்பூரில் முருகானந்தம், பொள்ளாச்சியில் வசந்தராஜன், கரூரில் செந்தில்நாதன், சிதம்பரத்தில் கார்த்தியாயினி, நாகப்பட்டினத்தில் ரமேஷ், தஞ்சாவூரில் எம். முருகானந்தம், சிவகங்கையில் தேவநாதன் யாதவ், மதுரையில் ராம ஸ்ரீனிவாசன் மற்றும் தென்காசியில் ஜான் பாண்டியன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
BJP releases the 4th list of the Lok Sabha Candidates from Puducherry and Tamil Nadu. pic.twitter.com/RGSctUWX7A
— ANI (@ANI) March 22, 2024
புதுச்சேரி மக்களவை தொகுதியில், பாஜக சார்பில் நமச்சிவாயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் புதுச்சேரி உள்துறை அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளர்:
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பாஜக சார்பில் நந்தினி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, விஜயதாரணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மையில் அவர் பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இடைத்தேர்தலில் விஜயதாரணி பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பையும் பாஜக வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்:
ஏற்கனவே நாடு தழுவிய அளவில் நான்கு கட்டங்களாக பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று வெளியான வாக்காளர்கள் பட்டியலில் தென்சென்னை, மத்திய சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி உள்ளிட்ட 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், தென்சென்னையில் அக்கட்சிட்யின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன், பெரம்பலூரில் பாரிவேந்தர், நெல்லையில் நயினார் நாகேந்திரன் மற்றும் கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ளது.