பாஜகவுக்கு எதிரான ட்வீட்; அதிக லைக் பெறாதது ஏன்? - ஐ.டி விங்கை சாடிய திமுக எம்.பி!
பாஜகவினருக்கு எதிராக சேர் செய்யப்பட்ட ட்வீட்டு 250 லைக்குகளை மட்டுமே பெற்றுள்ளது என திமுக ஐடி விங்கை கேள்வி கேட்ட எம்.பி, ஐடி விங் செயலாளரின் பதில், திமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஐடி விங் ட்வீட்:
கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கும் ஊட்டச்சத்து வாங்குவதில், திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்திருந்தார். ஆனால் இது பொய்யான குற்றச்சாட்டு என திமுக ஐடி விங், அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவு செய்திருந்தது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அளிக்கும் ஊட்டச்சத்து உணவு வாங்குவதில் அரசுக்கு இழப்பு என்றார் அண்ணாமலை;
— DMK IT WING (@DMKITwing) June 7, 2022
அவர் பொறுக்கி எடுத்து வந்த ஆதாரங்களில் 'ஒன்றுமில்லை' என்பதை சம்பந்தப்பட்ட துறையினரே விளக்கி, அவர் பொறுக்கிக் கொணர்ந்த ஆதாரங்கள், அத்தனையையும் நொறுக்கித் தள்ளினர்!#ShameonBJP pic.twitter.com/f8TvPeMUrW
எம்.பி கேள்வி:
இந்த ட்வீட் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி செந்தில்குமார், அனைத்து மாவட்டங்களிலும் மிகுந்த பலத்துடன் திமுக ஐடி விங் செயல்பட்டு வருகிறது. ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்துக்கு எதிரான இந்த ட்வீட்டுக்கு 6 மணி நேரத்தில் வெறும் 250 பேர் மட்டுமே லைக் செய்துள்ளனர். திமுக ஐடி விங்கிற்கு உள்ள பலத்திற்கு 1 லட்சம் லைக்குகளையாவது பெற்றிருக்க வேண்டாமா என கேள்வி எழுப்பினார். இந்த ட்வீட்டுடன் திமுக ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி. ராஜாவையும், செந்தில்குமார் டேக் செய்திருந்தார்.
DMK‘s @DMKITwing has one of the strongest robust team in terms of the strength of members spread evenly across all districts.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 7, 2022
So by strength a tweet by IT wing should reach a minimum of 1 lakh likes in 6 hours.
Unfortunately avg is 240.@TRBRajaa It’s time to #crack_the_whip. https://t.co/Rn5ek0G64q
முதலமைச்சரின் ட்வீட்டை கூட ரீட்வீட் செய்வதில்லை
மேலும் ஒரு போஸ்ட்டில் கருத்து தெரிவித்துள்ள செந்தில்குமார், தனிப்பட்ட முறையில் டி.ஆர்.பி. ராஜாவின் உழைப்பு எனக்கு தெரியும். ஆனால் திமுக ஐடி விங்கில் பணி செய்வோர் சரியாக வேலை செய்வதில்லை. முதலமைச்சரின் ட்வீட்டை கூட ரீட்வீட் செய்வதில்லை என குற்றச்சாட்டை வைத்தார்.
I personally know the amount of man hours and money you personally invest for the technical support & kudos to you @TRBRajaa & your team
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 7, 2022
But don’t show leniency in office bearers who enjoy the IT wing party post & do not contribute or take a minimum effort to retweet CMs msg.
டி.ஆர்.பி. ராஜாவின் பதில்:
திமுக எம்.பி செந்தில்குமாருக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள திமுக ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா, நிதி அமைச்சர் பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன் அமைத்து கொடுத்த அடிதளத்தில், திமுக ஐடி விங் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சரியாக பணி புரியாதவர்கள், மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
Several steps have been taken over the past few months doc. We are constantly building on the foundation laid by PTR Anna. Several of those steps can't be discussed here but rest assured that the #GomiyumGang is being given its own medicine👍🏽. Underperformers are being relieved👍🏽
— Dr. T R B Rajaa (@TRBRajaa) June 8, 2022
பிரச்சினை நிக்கவில்லை:
இத்துடன் திமுக ஐடி-விங் தொடர்பான விவாதம் முடிந்தது என்று நினைத்தால், நிற்கவில்லை. மேலும் பேசிய செந்தில்குமார், சரியாக பணி புரியாதவர்கள் நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, திமுக மீது பற்றுள்ள ஐடி விங்கை சமூக வலைதளத்தில் உருவாக்கிட முடியும் என பதிவிட்டுள்ளார்.
/Underperformers are being relieved👍🏽/
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 8, 2022
இதை நீங்கள் செய்தால் மட்டுமே ஓர் பெரும் போர் படை #திமுக மேல் பற்றுள்ள IT wing சமூக வலைதளத்தில் உருவாக்கிட முடியும்.
It can and it must be done under your supervision @TRBRajaa and guidance from your predecessor @ptrmadurai https://t.co/XH7WEYQHMg
ட்வீட்டருக்கு வந்த திமுக பிரச்சனை:
கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினை பெரும்பாலும் கட்சிகளுக்கு உள்ளேயே இருக்கும். பொது தளத்திற்கு பெரும்பாலும் தெரியாது. ஆனால் திமுக ஐடி விங் செயல்பாடுகள் குறித்து பொது தளத்திற்கு வந்துள்ளது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.ஆர். பாலுவின் மகனான டி.ஆர்.பி. ராஜா கட்சிக்கு மிக நெருக்கமானவராக அறியப்படுகிறார். மேலும் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் டி.ஆர்.பி. ராஜாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறையின் மீது செந்தில்குமார் குற்றச்சாட்டு வைத்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர், செந்தில்குமாரின் கருத்து திமுகவினரின் பலரது கருத்துக்களை வெளிக்காட்டி உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.