பீகார் தேர்தல்: காங்கிரஸ் படுதோல்வி! 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 5 இடங்களில் மட்டுமே முன்னிலை! அதிர்ச்சி தரும் முடிவு!
Bihar Assembly Congress Performance: "பீகார் தேர்தல் முன்னணி நிலவரங்கள் வெளிவந்த நிலையில், காங்கிரஸ் வெறும் 05 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது"

Bihar Election 2025 Result: "காங்கிரஸ் கட்சி பீகார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 5 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருவதால் காங்கிரஸ் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 193 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது."
தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னணி விபரங்கள்
தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை ஜெ.டி.யூ 101 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 101 இடங்களிலும் போட்டியிட்டன. எல்.ஜே.பி(சிராக்) 28 இடங்களில் போட்டியிட்டன, ஆர்.எல்.எம் 6 இடங்களிலும், பிற கட்சிகள் 7 இடங்களில் போட்டியிட்டன, போட்டியிட்டன.
தற்போதைய தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரப்படி, பாஜக 83 இடங்களிலும், ஜெ.டி.யூ என்பது இடங்களிலும், எல்.ஜே.பி (சிராக்) 23 இடங்களிலும், ஆர்.எல்.எம் 4 இடங்களிலும், இதர கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன. இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி 193 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இண்டியா கூட்டணி கட்சி வாரியாக முன்னிலை விவரங்கள்
பீகாரில் 243 தொகுதிகள் உள்ளன, இவற்றில் இந்தி கூட்டணியில் ஆர்.ஜே.டி., 143 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டது, சிபிஐ 9 இடங்களிலும், மார்க்சிஸ்ட் 4 இடங்களிலும், சிபிஐ (எம்.எல்) 20 இடங்களிலும், வி.ஐ.பி 15 இடங்களிலும் போட்டியிட்டன.
தற்போதைய தேர்தல் முன்னிலை நிலவரங்களின்படி, ஆர்.ஜெ.டி 34 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது, காங்கிரஸ் வெறும் 5 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 7 இடங்களிலும், விஐபி ஒரு இடத்திலும் இதுவரை முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் மீது தொடர்ந்து விமர்சனம்
இந்தநிலையில் வெறும் 5 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருவதால் காங்கிரஸ் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இறுதி கூட்டணியை உறுதி செய்யாமல் காங்கிரஸ் தான் இருந்து வந்ததாலும், 60 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் முன்னிலை வகுத்து வருவது விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.




















