மேலும் அறிய

காங்கிரஸிடம் வீழ்ந்த பாஜக.. சம்பவம் செய்த மம்தா.. தேசிய அளவில் இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. 2இல் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10இல் வெற்றிபெற்று பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்திருக்கிறது இந்தியா கூட்டணி.

மேற்குவங்கத்தில் 4 தொகுதிகளுக்கும் இமாச்சல பிரதேசத்தில் 3 தொகுதிகளுக்கும் உத்தரகாண்டில் 2 தொகுதிகளுக்கும் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கும் கடந்த கடந்த 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. அதன்படி, 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளில் பாஜகவும் ஒரு தொகுதியில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.

நேரடி போட்டியில் காங்கிரஸிடம் வீழ்ந்த பாஜக: இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 6 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. அதில், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, நலகர் தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ஹமிர்பூர் தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள உத்தரகாண்டில் இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மத்திய பிரதேசத்தில் அமர்வாரா தொகுதியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி பெற்றுள்ளது.

சம்பவம் செய்த மம்தா: மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா,  மணிக்தலா ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், மம்தாவின் கோட்டை மேற்குவங்கம் என்பது நிரூபணமாகியுள்ளது.

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல, பஞ்சாபில் இடைத்தேர்தல் நடைபெற்ற மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாகை சூடியுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் பீகாரில் ரூபாலி தொகுதியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரையும் தோற்கடித்து சுயேச்சையாக போட்டியிட்ட சங்கரி சிங் வெற்றி பெற்றுள்ளார். கடந்த மாதம் வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜகவுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. 240 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக, கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், 7 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலும் ஆளும் பாஜகவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள மாநில தேர்தல்களிலும் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடருமா அல்லது பாஜக மீண்டெழுமா என பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆந்திராவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து.. சிதறி கிடந்த உடல்கள்.. பரபரப்பு!
ஆந்திராவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து.. சிதறி கிடந்த உடல்கள்.. பரபரப்பு!
பள்ளி பேருந்துக்குள் குழந்தைகள்.. கொளுத்த முற்பட்ட கும்பல்.. பாரத் பந்தின்போது பதற்றம்!
பள்ளி பேருந்துக்குள் குழந்தைகள்.. கொளுத்த முற்பட்ட கும்பல்.. பாரத் பந்தின்போது பதற்றம்!
Velankanni Matha Festival:வேளாங்கண்ணி மாதா திருவிழாவுக்கு 1050 சிறப்பு பேருந்துகள்:முன்பதிவு செய்வது எப்படி..!
Velankanni Matha Festival:வேளாங்கண்ணி மாதா திருவிழாவுக்கு 1050 சிறப்பு பேருந்துகள்:முன்பதிவு செய்வது எப்படி..!
Tamilnadu Investment: ”தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்”: 5 பாயிண்ட்டுகளை அடுக்கிய முதலீட்டாளர்
Tamilnadu Investment: ”தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்”: 5 பாயிண்ட்டுகளை அடுக்கிய முதலீட்டாளர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Subramanian swamy slams Modi : ”பிரதமர் பதவிக்கு ஆப்பு! செப்.17 வர தான் டைம்”எச்சரிக்கும் சு.சுவாமிNTK Seeman : ”இப்படி பண்ணிட்டியே”தூக்கியடித்த சீமான்!cகலக்கத்தில் நாதகவினர்!DMK BJP : ”பாஜகவை வளர்க்கும் திமுக” ஸ்டாலின் ரகசிய கூட்டணி? அச்சத்தில் அதிமுகRahul gandhi : உடையும் INDIA கூட்டணி? பதற்றத்தில் காங்கிரஸ்! ராகுல் அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆந்திராவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து.. சிதறி கிடந்த உடல்கள்.. பரபரப்பு!
ஆந்திராவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து.. சிதறி கிடந்த உடல்கள்.. பரபரப்பு!
பள்ளி பேருந்துக்குள் குழந்தைகள்.. கொளுத்த முற்பட்ட கும்பல்.. பாரத் பந்தின்போது பதற்றம்!
பள்ளி பேருந்துக்குள் குழந்தைகள்.. கொளுத்த முற்பட்ட கும்பல்.. பாரத் பந்தின்போது பதற்றம்!
Velankanni Matha Festival:வேளாங்கண்ணி மாதா திருவிழாவுக்கு 1050 சிறப்பு பேருந்துகள்:முன்பதிவு செய்வது எப்படி..!
Velankanni Matha Festival:வேளாங்கண்ணி மாதா திருவிழாவுக்கு 1050 சிறப்பு பேருந்துகள்:முன்பதிவு செய்வது எப்படி..!
Tamilnadu Investment: ”தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்”: 5 பாயிண்ட்டுகளை அடுக்கிய முதலீட்டாளர்
Tamilnadu Investment: ”தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்”: 5 பாயிண்ட்டுகளை அடுக்கிய முதலீட்டாளர்
83 வயது முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை: மீனாட்சி மருத்துவமனை சாதனை
83 வயது முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை: மீனாட்சி மருத்துவமனை சாதனை
மூளையில் வீக்கம்.. கடும் காய்ச்சல்.. 2 மாதங்களில் 28 குழந்தைகளின் உயிரை பறித்த மர்ம வைரஸ்!
மூளையில் வீக்கம்.. கடும் காய்ச்சல்.. 2 மாதங்களில் 28 குழந்தைகளின் உயிரை பறித்த மர்ம வைரஸ்!
குற்றாலம்  அருவியில் திடீரென உருண்டு வந்த கல்..! 5 பேர் படுகாயம்..!
குற்றாலம் அருவியில் திடீரென உருண்டு வந்த கல்..! 5 பேர் படுகாயம்..!
கள்ளச்சாராயத்திற்கு 10 லட்சம்; குழந்தைக்கு 5 லட்சம் கொடுக்க முடியாதா? - நீதிபதிகள் கேள்வி?
கள்ளச்சாராயத்திற்கு 10 லட்சம்; குழந்தைக்கு 5 லட்சம் கொடுக்க முடியாதா? - நீதிபதிகள் கேள்வி?
Embed widget