மேலும் அறிய
Advertisement
எத்தனை சோதனைகளை நடத்தினாலும் திமுகவின் கிளை செயலாளர் கூட பயப்படமாட்டான் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஒன்றிய அரசின் சார்பு அணிகளாக, அமலாக்கத்துறை சிபிஐ செயல்படுகின்றன - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
“பாஜக எத்தனை சோதனைகளை நடத்தினாலும் திமுகவின் கிளை செயலாளர் கூட பயப்படமாட்டான். பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் ஆகியோரின் மறுஉருவமாக செயல்படுவேன்” என நாகையில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூளூரைத்தார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நாகையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாகை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் திரண்டு வந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக மூத்த முன்னோடிகளுக்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார். அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உதயநிதி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவில் இளைஞரணி, மீனவரணி என சார்பு அணி உள்ளது. அதுபோல பாஜகவின் சார்பு அணிகள்தான் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை என கிண்டலடித்தார்.
”அதிமுக ஆட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது ஆர்கே நகர் பண பட்டுவாடா குறித்த விவரங்கள் அடங்கிய டைரியை சுவர் ஏறி குதித்து வெளியே தூக்கி போட்ட நபர்தான் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். அதிமுக ஆட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோரது வீட்டில் சோதனை நடந்தது. யாரையும் பாஜக அரசு கைது செய்யவில்லை” என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
"பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு இந்திய நாட்டின் ஜனாதிபதியை அழைக்காதது எதற்கு? அதற்கு காரணம் அவர் கணவரையும் குழந்தைகளையும் இழந்தவர். அதனால்தான் அழைப்புவிடுக்கவில்லை இதுதான் சனாதனம். ஆரியத்தின் ஆட்சிக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்" என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய அரசின் சார்பு அணிகளாக, அமலாக்கத்துறை சிபிஐ செயல்படுகின்றன.பாஜக தமிழகத்தில் எத்தனை சோதனைகளை நடத்தினாலும் திமுகவின் கிளை செயலாளர் கூட பயப்படமாட்டான் என்றார். மேலும் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் ஆகியோரின் மறுஉருவமாக தான் செயல்படுவேன் எனவும் சூளுரைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion