மேலும் அறிய

“அடிதடி; கட்டப்பஞ்சாயத்து கூடாது: அடுத்து நம்பதான்...” - பாமகவினருக்கு அன்புமணி ஓபன் அட்வைஸ்!

எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது ,ஆனால் பாமக ஒருமுறையாவது ஆட்சிக்கு வரவேண்டும்

பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு திம்மாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன் மற்றும் கணபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதில மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி,  மாநில வன்னியர் சங்க தலைவர் திருக்கச்சூர் ஆறுமுகம்,  உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 
“அடிதடி; கட்டப்பஞ்சாயத்து கூடாது: அடுத்து நம்பதான்...” - பாமகவினருக்கு அன்புமணி ஓபன் அட்வைஸ்!
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்
 
இதனைத்தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், ”தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்குகள் பெண்களுடையது. ஆனால் அது ஓட்டுகளாக மாறவில்லை. அதனை ஓட்டுக்களாக மாற்ற வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியில் யாரும் பொறுப்புக்காக வரவில்லை, தமிழகத்தில் நாம் கட்சியை தொடங்கி 32-ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை,  நம்முடைய கட்சி வித்தியாசமானது ஆட்சிக்கு வருவதற்க்கு முன்பாக நிறைய சாதனைகளை செய்துள்ளனர்.
 
   எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது.‌ ஆனால் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும். இந்த பொதுக்குழு கூட்டம் கூட்டியது நான் முதலமைச்சராக வரவேண்டும் என்று இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதால் தான், நம்மால் மட்டுமே தமிழகத்தை உயர்த்த முடியும். 55-ஆண்டுகாலம் தமிழகத்தை இரு கட்சிகளும் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் எந்த முன்னேற்றம் ஏற்படல்லை” என கூறினார்‌.
 
“அடிதடி; கட்டப்பஞ்சாயத்து கூடாது: அடுத்து நம்பதான்...” - பாமகவினருக்கு அன்புமணி ஓபன் அட்வைஸ்!
 
பாமக 2.0 திட்டம்
 
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் எனவும், அதனால் இந்த பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு உள்ளதாகவும், புதியதாக பாமக 2.0 திட்டம் செயல்படுத்தி உள்ளது. அடுத்த வரக்கூடிய தேர்தல்களில் புதிய யூகங்களை பயன்படுத்த உள்ளோம். இப்போதே அதனை நடைமுறை படுத்தி உள்ளோம். அனைத்து கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும், வார்டுகளிலும் நம்முடைய கட்சி கொடி பறக்க வேண்டும். நம்முடைய அகராதியில் முடியாதது என்று ஏதும் இல்லை வரும் 2026 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் அதனை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் அதனை வாக்குகளால் மாற்ற வேண்டும் என தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 
 
“அடிதடி; கட்டப்பஞ்சாயத்து கூடாது: அடுத்து நம்பதான்...” - பாமகவினருக்கு அன்புமணி ஓபன் அட்வைஸ்!
2026-ல் திமுக, அதிமுக எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அதனால் நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றினால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். திமுக அடுத்த தேர்தலில் வெற்றி பெறாது. அதிமுகவின் காலம் போய் விட்டது. அடுத்ததாக மக்கள் நம்மீது தான் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதனால் எங்கும் அடிதடி கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என பேசினார்.

“அடிதடி; கட்டப்பஞ்சாயத்து கூடாது: அடுத்து நம்பதான்...” - பாமகவினருக்கு அன்புமணி ஓபன் அட்வைஸ்!
 
சிறப்பு பொதுக்குழு கூட்டம்
 
  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “செங்கல்பட்டு, மதுராந்தகம் ஏரி தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. அதனை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாலாற்றில் ஒவ்வொரு 5-கிலோ மீட்டருக்கும் தடுப்பணைகளை கட்ட வேண்டும். காலமாற்றத்தின் தாக்குதல் தற்போது துவங்கி உள்ளது‌. அடுத்த மூன்று ஆண்டுகளில் இன்னும் கடும் பாதிப்புகள் ஏற்படும். அதனால் மழைக்காலங்களில் தண்ணீரை சேமிக்க அணைகள் கட்ட வேண்டும். மேட்டூர் அணையில் நேற்று 115 அடி தண்ணீர் வந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அது நிறைவடைந்து விடும். அதனால் முன்கூட்டியே அணையை திறக்க வேண்டும் என பேசினார். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை தற்போது அதிகமாகி உள்ளது. குறிப்பாக எண்ணெய், பருப்புகள், கேஸ் விலை உள்ளிட்டவை விலையேறி வருகிறது.
 
“அடிதடி; கட்டப்பஞ்சாயத்து கூடாது: அடுத்து நம்பதான்...” - பாமகவினருக்கு அன்புமணி ஓபன் அட்வைஸ்!
 
கொரோனாவிற்கு பிறகு பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்ந்திருப்பதால் மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் மத்திய மாநில அரசுகள் விலையேற்றத்தை தவிர்க்க வேண்டும் எனவும், பாமக 2.0 புதிய யூக்திகளும், வியூகங்களும் பயன்படுத்த இருக்கிறோம். 2016-ல் மாற்றம் முன்னேற்றம் அன்புமணியை விட பலமான திட்டங்களை வகுத்துள்ளோம். திமுக ஆட்சியில் கொரோனாவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பாக செயல்பட்டு உள்ளார்.

“அடிதடி; கட்டப்பஞ்சாயத்து கூடாது: அடுத்து நம்பதான்...” - பாமகவினருக்கு அன்புமணி ஓபன் அட்வைஸ்!
 
மேலும் வருகின்ற 28  தேதி நடைபெற உள்ள சிறப்பு பொதுக் கூட்டத்தில் தலைவர் பதவிக்கு உங்கள் பெயர் அடிபடுகிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தின் நோக்கம் பாமக 2.0   , நேரில் வந்து பார்த்து என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்    என சூசகமாக பதிலளித்தார்.
 
  மேலும் பேசுகையில், பேரறிவாளன் விடுதலை பெற்றதை பாமக உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் வரவேற்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 19-பேர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஆறு பேர் ஏற்கனவே இரண்டு ஆயுள் தண்டனையை அனுபவித்து உள்ளனர். அதனால் அவர்களையும் விடுதலை செய்யவேண்டும் என கூறினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget