மேலும் அறிய

Anbumani Ramadoss: தமிழகத்தில் அதிகமாக மதுக்குடிப்பவர்கள் வன்னியர்கள்தான்... பரபரப்பை ஏற்படுத்திய அன்புமணி

தமிழகத்தில் அதிகமாக மதுக்குடிப்பவர்கள் வன்னியர்கள் தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் அதிகமாக மதுக்குடிப்பவர்கள் வன்னியர்கள் தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கையொப்பமிட்டு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில் அருகே  நடைபெற்றது. இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கடிதம் அனுப்பும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள்,வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பின்னர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்த அவர்,  வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியும், இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களிடையே கடிதங்களை வழங்கி அதில் கையொப்பமிட்டு முதல்வருக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, “வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில், முதலமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் தலைவரும்  ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதியுமான பாரதிதாசனுக்கும் கடிதங்களை அனுப்பி உள்ளோம்.  வன்னியர் சமுதாயம் மட்டுமின்றி, அனைத்து மதத்தினர் மற்றும் சாதியினர் இதுபோன்று கடிதங்களை முதல்வருக்கு அனுப்பி வருகின்றனர். லட்சக்கணக்கான கடிதங்கள் 3 நாட்களில் போய் சேர்ந்திருக்கிறது. 

தமிழகத்தில் வன்னியர்கள் அதிகமாக குடிசை வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிகமாக கைநாட்டு வைப்பார்கள் மற்றும் கூலி வேலை செய்பவர்கள், கல் உடைப்பது. ரோடு போடும் வேலையில் வன்னியர்கள் தான் அதிகம் உள்ளனர். அதேபோல் அதிகமாக மது குடிப்பவர்களும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான். 

தற்போதுள்ள சூழ்நிலையில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பது தான் சமூக நீதி. இதுதான் நியாயம் இந்த நியாயத்தை எப்போதே செய்திருக்க வேண்டும்.உச்ச நீதிமன்றம் சொல்லி ஒரு வருடமாகியும் அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம். தமிழ்நாட்டில் போராட்டம் என்றால் அது பாமகதான். அந்த அளவுக்கு எங்களை அரசு தள்ள வேண்டாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மே 31 ஆம் தேதிக்குள் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்" என அன்புமணி ராமதாஸ் என தெரிவித்தார். 

மேலும் படிக்க: 10.5% இடஒதுக்கீடு விவகாரம் : அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அன்புமணி..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget