மேலும் அறிய

’மாற்றம், முன்னேற்றம்’ பாமக தலைவராகுகிறார் அன்புமணி ராமதாஸ்..?

திமுகவில் உதயநிதி, பாஜக-வில் அண்ணாமலை போன்றோருக்கு நிகராக இளைஞர்களை கட்சிக்கு இழுக்கவும், அவர்களை வழிநடத்தவும் அன்புமணியை பாமக தலைவராக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது ஆட்சியை பிடிக்க வேண்டும் அல்லது ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்ற ‘பலே’ திட்டத்துடன் பாமக இப்போதே களம் இறங்கியுள்ளது. அதற்கான முக்கியப்படியாக, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ், விரைவில் அந்த கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள பாமக பொதுக்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.’மாற்றம், முன்னேற்றம்’ பாமக தலைவராகுகிறார் அன்புமணி ராமதாஸ்..?

நீண்ட காலமாக பாமக தலைவராக இருக்கும் ஜி.கே.மணி, பாமக சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்து வரும் தலைவர் பொறுப்பு அன்புமணிக்கு மடைமாற்றம் செய்யப்படவுள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக இப்போதே பாமக வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்ற வாசகத்தை முன்வைத்து 234 தொகுதிகளில் பாமக தனித்து போட்டியிட்டதுபோலவே, அடுத்த சட்டமன்ற தேர்தலை பாமக தலைமையில் கூட்டணி அமைத்து, அன்புமணியை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை கட்டமைக்கவும், இளைஞர்களை இழுக்கவும் இப்போதிலிருந்தே பாமக தயாராக முடிவு செய்துள்ளது. அதன் முக்கிய பகுதியாகதான் அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.’மாற்றம், முன்னேற்றம்’ பாமக தலைவராகுகிறார் அன்புமணி ராமதாஸ்..?

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 33 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றும், பாமக ஆள்பவர்களின் கட்சியாக மாறுவது எப்போது என்றும் இராமதாசு கேள்வி எழுப்பி, நமது அடுத்த இலக்கு அதுவாகவே இருக்கட்டும் என்று தனது ட்விட்டர் மூலம் கடந்த 16ஆம் தேதி பதிவிட்டிருந்தார். இதற்கு தனது ட்விட்டர் மூலமே பதிலளித்த அன்புமணி, அய்யாவின் கனவை நனவாக்க, நான் உங்களை வழி நடத்துவேன் என்று கூறியிருந்தார். இந்த ட்விட்டர் பதிவு குறித்து பாமக வட்டாரங்களில் விசாரித்தபோதுதான், அன்புமணியை தலைவராக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  

இளைஞர்களை மையப்படுத்தி கட்சியை வலுவாக்க வேண்டுமென்றால் அதற்கு அன்புமணி-தான் சரியாக இருப்பார் என்றும், திமுக-வில் உதயநிதி, பாஜக-வில் அண்ணாமலை போன்றோருக்கு ஈடுக்கொடுத்து செயலாற்ற வேண்டுமென்றால் பாமக தலைவர் பொறுப்பை அன்புமணிக்கு தரவேண்டும் என்றும் தைலாப்புரம் தோட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஜி.கே.மணிக்கு கட்சியின் ஆலோசனைக் குழு தலைவர் போன்ற பொறுப்பு கொடுக்கலாம் என்றும் பேசப்பட்டுள்ளது. அதேபோல், கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் உள்ள பொறுப்புகளை தரவும், கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகளை மாற்றவும் இராமதாசு திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, ஊடகங்களில் பாமக தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாக வைக்க பத்திரிகையாளர்களுடன் நெருங்கி பழக செய்தித் தொடர்பாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களை மேம்படுத்தி, அதன் மூலம் இளைஞர்களை ஈர்க்கவும் முடிவு செய்து அதற்கான பணிகளும் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்கின்றன.’மாற்றம், முன்னேற்றம்’ பாமக தலைவராகுகிறார் அன்புமணி ராமதாஸ்..?

2016ல் தனித்து போட்ட பாமக, கடந்த 2021ஆம் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 4 தொகுதிகளில் வென்றுள்ளது. அதேபோல், 20ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவோடு  பாமக கூட்டணி அமைத்தது, அப்போது அந்த கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 20 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி வைத்தால் அது பாமக தலைமையில்தான், இருக்க வேண்டும் என்றும் அதற்கு கட்சியை தயார்படுத்தும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விரைவில் பாமக-வில் பல மாற்றங்களை எதிநோக்கலாம்..!

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget