மேலும் அறிய

”4 MLA 40 ஆக மாறாதது ஏன்? ஒருத்தனும் செய்யல”! - பாமக பொதுக்குழுவில் வேதனையை கொட்டித்தீர்த்த ராமதாஸ்

’’ரியல் எஸ்டேட் பிசினசில் நீங்கள் காட்சிய ஆர்வத்தை, நூறு வாக்குகளை என்னால் தனியாக வாங்க முடியும் என்று உங்களால் மார்த்தட்டியும், மார்த்தட்டாமலும் சொல்லமுடியுமா?’’

சென்னை திருவேற்காட்டில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அக்கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசுகையில், ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோர் எனக் கேட்ட தாய் இங்கு வரவில்லை, தகப்பன் வந்துள்ளேன். இந்த பொதுக்குழுவில் 3 ஆவது தலைவராக, தீரன், ஜி.கே.மணிக்கு அடுத்து அன்புமணி ராமதாசை தலைவராக தேர்வு செய்துள்ளீர்கள். அவரை நாம் அனைவரும் வாழ்த்துகிறோம் வாழ்த்தி கொண்டே இருக்கிறோம். அவரை வாழ்த்த நமது கட்சியின் பொறுப்பாளர்கள், அனுதாபிகளை கடந்து ஒட்டுமொத்த தமிழக மக்கள் அவரை வாழ்த்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் இந்த மண் பயனுற வேண்டும். இந்த மண்ணிலே வாழும் மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும். பாமகவின் கொள்கைகள் சிறப்பான கொள்கைகள், இதை மேலும் வலுப்படுத்தி தமிழகத்திற்கு மிகச்சிறந்த நல்லாட்சி தர புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் அவர்களை பாமக பொதுக்குழு தேர்வு செய்துள்ளது. 

2026-இல் மாற்றம் 

இது கட்சியின் பரிணாம வளர்ச்சி என சொல்வதை தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் ஒரு மாற்றத்தை தர வேண்டும் என்று நாங்கள் 2016-இல் கேட்டபோது, அதற்கான திட்டங்கள் மக்கள் முன் வைத்தபோது அதற்கு ஆதரவு இல்லை. இன்றைக்கு புதிய தலைவராக அன்புமணி பொறுப்பேற்ற பிறகு தமிழக மக்கள் மத்தியிலே நிச்சயம் மாற்றம் உருவாகும், 2026-இல் தமிழக மக்கள் நிச்சயம் மாற்றத்தை உருவாக்குவார்கள். அன்புமணியின் செயல்பாடும், அற்புதமான திட்டங்களும் வாக்காளர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட போகின்றன. அந்த நாள் நிச்சயம் 2026-ஆம் ஆண்டாக இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

 யார் குற்றம்? என் குற்றமா?

துணைப்பொதுச்செயலாளர்களை மாவட்ட செயலாளர்களாக மாற்றி அவர்களுக்கு அதிக அதிகாரத்தை கொடுத்து, 7 மாதங்கள் ஆகிறது. இந்த 7 மாதங்களிலே மாவட்ட செயலாளர்கள் செய்த சாதனைகளை இந்த நல்ல நேரத்திலே சொல்லாமல் இருக்க முடியாது. புதிய பொறுப்பாளர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒன்றிய செயலாளர்களுக்கு என் கையாலே நியமன கடிதம் கொடுத்தேன். என்னுடைய வீட்டின் உள்ளே அவர்களை அழைத்து 2, 3 மாதங்கள் அவர்களிடம் பேசி உறவாடி சொல்லி அனுப்பினேன். இருந்தாலும் ஐயப்ப பக்தர்கள் செல்லும் போது ஒரு வாரம் கல்லும் முள்லும் காலுக்கு மெத்தை என்று சொல்லி கொண்டே போவார்கள். 43 ஆண்டுகள் என் கால்கள் கல்லையும், முள்ளையும் மெத்தையாக நினைத்து தமிழ்நாட்டில் இருக்கும் 70 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று, மக்களின் வாழ்க்கை முன்னேற பாடுபட்டுள்ளேன். ஆனாலும் 1996-இல் தனியாக நின்று 4 இடங்கள், 25 வருடங்களுக்கு பிறகு தற்போது கூட்டணியில் சேர்ந்து 5 இடங்கள். இது இப்படி ஆனது யாரால், எதனால், யார் குற்றம்?, என் குற்றமா? நான் உங்களை கோபத்தோடு கேட்கவில்லை, யார் குற்றம்?

100 கார்களில் வரவேற்பதில் பெருமிதம்

தனி ஒரு காரிலே தமிழகத்தை நான் வலம் வந்த  காலம், இப்போது, ஒரு கூட்டம் என்று சொன்னால் 100 முதல் 200 கார்கள் என்னையும் அன்புமணியையும் வரவேற்பதற்காக. இந்தளவு வளர்ச்சியை பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன். ஆனால் நீங்கள் அந்த அளவிற்கு இந்த கட்சியை வளர்த்திருக்க வேண்டாமா?. இப்போது பொறுப்புகளை வாங்கி கொண்டீர்கள், 7 மாதத்திலே நீங்கள் சாதித்த சாதனையை உங்கள் மனசாட்சி பேசட்டும். பல வெற்றிக்கதைகளே உங்களிடம் நான் சொல்லி உள்ளேன்.  

4 எம்.எல்.ஏ; 40 எம்.எல்.ஏ ஆகாதது ஏன்?

2012-இல் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி, 2013-இல் ஒரே ஆண்டில் ஆட்சியை பிடித்தது. இப்போது பஞ்சாபிலும் பிடித்துவிட்டார்கள். இது எப்படி நடந்தது. இதை உங்களால் சாதிக்க முடியாதா? இதுபோன்ற நம் கட்சியின் அற்புதமான கொள்கைகளை இந்தியாவில் வேறு எந்த கட்சியாவது வைத்திருக்கிறதா? சொல்லுங்கள் (கோபமாக கேட்கிறார் - தொண்டர்கள் இல்லை என சொல்கிறார்கள்) அப்படியானால் நாம் ஏன் வெற்றி பெறவில்லை, 4 எம்.எல்.ஏ, 40 எம்.எல்.ஏவாக ஏன் ஆகவில்லை? யார் குற்றம் என் குற்றமா? சொல்லுங்கள் யார் குற்றம் (எங்களுடைய குற்றம்தான் என தொண்டர்கள் பதில்)

பாமகவை பின்பற்றிய கெஜ்ரிவால்

இந்த குற்றத்தை இனி செய்யப்போகிறீர்களா? (செய்யமாட்டோம் என மேடையில் இருந்து குரல் வருகிறது). ஏனென்றால் ஒரு புதிய இளந்தலைவரை உங்களுக்கு கொடுத்துள்ளோம். கெஜ்ரிவால் கட்சி 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கட்சியில் சேர்த்தார்கள், போலி வாக்காளர்களை நீக்கினார்கள், தொலைபேசி பரப்புரையை மேற்கொண்டார்கள், 7 மாதத்தில் மாற்றத்திற்கான கலைக்குழுவை உருவாக்கினார்கள், வாக்குச்சாவடி மேலாண்மை செய்தார்கள் இதனை எல்லாம் நாம் அரசியல் பயிலரங்கத்தில் பல்லாண்டு காலம் செய்ததுதான். புதியதாக கெஜ்ரிவால் ஒன்றும் செய்துவிடவில்லை. குரூப் டைனமிக்ஸ் என்ற வார்த்தை இந்தியாவில் இருக்கும் ஒரு சில கட்சிகளை தவிர வேறு யாருக்காவது தெரியுமா? தலைமைப் பண்புகளை பற்றி எவ்வளவு சொல்லி கொடுத்து இருக்கிறோம். 

ஒரு தொகுதியில் ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு லட்சம் வாக்குக்களை கொண்டு வர முடியும், இது ஒரு சாதாரண முயற்சி, இதை ஏன் செய்யவில்லை. பொறுப்புகள் வாங்கி 7 மாதங்களாகிறது. இளைஞர்களை இருசக்கர வாகனத்தில் ஒன்றியம் பூராவும் செல்ல சொன்னோம், அதை தொடங்கி வைக்க இந்த ராமதாசே வருகிறேன் என்று சொன்னேனே, யார் என்னை கூப்பிட்டீர்கள்? (தொண்டர்களிடையே கேள்வி எழுப்புகிறார்). 

ரியல் எஸ்டேட் பிசினஸில் ஆர்வம் காட்டும் பாமகவினர்

கட்சியிலே ஆங்காங்கே சில இடங்களிலே கோஷ்டிகள், பவர் பாலிடிக்ஸ், ரியல் எஸ்டேட் பிசினசில் நீங்கள் காட்டிய ஆர்வத்தை, நூறு வாக்குகளை என்னால் தனியாக வாங்க முடியும் என்று உங்களால் மார்த்தட்டியும், மார்த்தட்டாமலும் சொல்லமுடியுமா?. சென்னையிலேயே ஒரு வார்டில் இரண்டே இரண்டு ஓட்டுகளை வாங்கி உள்ளோம். இந்த நேரத்திலே சொல்கிறேன். அன்புமணி அவர்களே, சில காக்கைகள் வரும், அந்த காக்கைகளை எல்லாம் கண்டு கொண்டு, வேலை செய்பவனை, உழைப்பவனை பக்கத்திலே வைத்து கொண்டு அவர்களோடு தொலைபேசியில் பேசுங்கள். காக்கைகள் நமக்கு இனி வேண்டாம், காக்கைகளுக்கு நாம் தினமும் தைலாபுரத்திலே அம்மா சாப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறார். அது வேறு காக்கை. 

பேனர்களில் யார் படத்தை பெரிதாக போடுவது, யார் படத்தை சின்னதாக போடுவது, தொலைபேசியில் 9 மணிக்கு மேல் சிலபேரு ரொம்ப நல்லா பேசுவாங்க, நலம் விசாரிப்பாக. நான் இருக்கிற தவறை எல்லோரையும் கூட்டிவச்சு இந்த பொதுக்குழுவில் சொல்லைவில்லை என்றால் வேறு எப்போது சொல்வேன். ஏனென்றால் 43 ஆண்டுகாலம் நான் உழைத்தேன்; இன்றும் உழைத்துகொண்டு இருக்கிறேன். இன்னும் 2 மாதத்தில் 83 வயதை கடந்து விடுவேன், கோலூன்றியாவது இந்த ஊமை ஜனங்களுக்கு நான் பாடுபடுவேன் என்று முத்து விழாவில் சொன்னேன். ஆனால் 4 எம்.எல்.ஏ, 40 எம்.எல்.ஏவாக ஆகவில்லை, 5 எம்.எல்.ஏவாகத்தான் ஆகி இருக்கிறது. 

திமுக கட்டுப்பாடு உள்ள இயக்கம் 

சுவற்றில் திமுக விளம்பரத்தை பார்த்தேன். அதில் கலைஞரின் அப்பா பெயர் முத்துவேல், கலைஞர் பெயர், அதன் பிறகு ஸ்டாலின் பெயர் இப்படி வரிசையாக வருகிறது. அது ஒரு கட்டுப்பாடு உள்ள இயக்கம். அது போல் பல கட்சிகள் உள்ளது. ஆனால் எல்லா கட்சியை விட இளைஞர்கள், இளம் பெண்கள் அதிகம் உள்ள கட்சி பாமகதான். திமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? என்று கேட்டால் அமைதியாக உட்கார்ந்து இருப்பான், தனியா நிற்கலாமா என்றால் கையை தூக்குவார்கள்.  

கைத்தூக்குறவன் ஒருத்தனும் இல்லை; ஒருத்தனும் செய்யல

100*1000 என்ற மந்திரத்தை சொல்லி அனுப்பி இருந்தேன். இதுவரை 7 மாதங்களாக ஒருவரும் அதை செய்யவில்லை. நாங்கள் செய்து இருக்கிறோம் என்று சொல்லும் மாவட்ட செயலாளர்கள் சொல்லுங்கள் பார்ப்போம். எழுந்து நின்று கைத்தூக்குறவன் ஒருத்தனும் இல்லை; ஒருத்தனும் செய்யல, எனக்கு தெரியாதா? மத்திய அரசின் ஸ்பெஷல் ப்ராஞ்ச், மாநில அரசின் இண்டர்லிஜண்ட் பிராஞ்ச் எனக்கு தகவல் சொல்கிறார்கள்.  கூட்டம், கல்யாணங்களில் எங்கள் குடும்பத்து பெண்களின் படத்தை தயவு செய்து போடாதீர்கள். ஏனென்றால் அங்கேதான் காக்கா நுழைகிறது. 

உண்மையான பாமக தொண்டன் யார்?

தென் அமெரிக்காவில் சிலி என்ற நாட்டில் கடந்தாண்டு கேப்ரியல் 35 வயதில் பிரதமர், நியுசிலாந்தில் ஜெசிந்தா ஆட், 37 வயதில் மூன்று முறை பிரதமர், இப்போது சண்டை நடக்கும் உக்ரைனில் விளாடிமிர் ஜோன்ஸ்கி ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தி, இப்போது அவர் 41 வயதில் பிரதமராக வந்துள்ளார். இப்போது பொறுப்புகள் எதுவும் எனக்கு இல்லை என்றாலும் அவனால் நூறு ஓட்டுகள் வாங்கி அன்புமணியை முதலமைச்சர் ஆக்க முடியும் என்று சொல்பவந்தான் உண்மையான பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டன். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
Embed widget