Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
Anbumani Ramadoss: பாமக தலைவர் அன்புமணி அக்கட்சியின் நிறுவனரும், தனது தந்தையுமான ராமதாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss: பாமக தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர், மனம்விட்டு பேசி பிரச்னையை தீர்க்க வேண்டும் என கட்சியின்கவுரவ தலைவர் ஜி.கே. மணி வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி வாழ்த்துச் செய்தி:
பாமகவில் அதிகாரம் யாருக்கு என்பதில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே உச்சகட்ட மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் தந்தையர் தினத்தை ஒட்டி அன்புமணி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்! தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்” என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேநேரம், தனது தந்தையையோ அல்லது கட்சி தொடர்பாகவே எதையும் அவர் குறிப்பிடவில்லை.
நெட்டிசன்கள் அட்டாக்:
அன்புமணியின் வாழ்த்துச் செய்தியின் கமெண்ட் பாக்ஸில் நெட்டிசன்கள் களமாடி வருகின்றனர். அதன்படி, ”ஒருவேளை வயதாகிவிட்டதால் கட்சி அதிகாரத்தை தியாகம் செய்யும்படி, தனது தந்தைக்கு அன்புமணி வாழ்த்துச் செய்தியால் மறைமுகமாக வலியுறுத்துகிறாரோ” என ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். அதேநேரம், பாமக அனுதாபிகளோ, “அய்யாவை நேரில் சென்று சந்தித்து பேசி பிரச்னையை சுமூகமாக முடியுங்கள் அண்ணா” என்றெல்லாம் வலியுறுத்துகின்றனர். இதுபோக மற்றொரு தரப்போ, அதிகாரம் மற்றும் பணத்திற்காகவும், வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காகவும் பாஜகவுடன் கூட்டு சேர முயற்சித்துக்கொண்டு, தந்தையை ஓரம்கட்டிவிட்டு இன்று தந்தையர் தின வாழ்த்துகளை கூறுகிறீர்களா? எனவும் விமர்சித்து வருகின்றனர்.
ராமதாஸ் ஆலோசனை:
புதியதாக நியமித்த நிர்வாகிகளுடன் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் வடமாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிடோருடன் ஜி.கே. மணி மற்றும் எம்.எல்.ஏ. அருள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக மாவட்ட பொதுக்குழுவை கூட்ட அன்புமணி அறிவுறுத்திய நிலையில், ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஜி.கே. மணி வேதனை:
முன்னதாக தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி, “கட்சியில் நடைபெறும் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக உள்ளன. நிறுவனர் ராமதாஸும், அன்புமணியும் மனம் விட்டு பேச வேண்டும். இருவருக்கும் இடையே சுமூக தீர்வு ஏற்பட வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். இருவரும் மனம் விட்டு பேசினால் சுமூக தீர்வு எட்டப்படும்” என வேதனை தெரிவித்துள்ளார்.
”ராமதாஸ் நியமனங்களே செல்லும்”
இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, “பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிக்கும் நியமனங்களே கட்சியில் செல்லும். பாமக இருபிரிவாக தான் உள்ளது. கட்சி உடையவில்லை. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனனை நீக்கிவிட்டு புதியவை தேர்வு செய்வோம்.” என தெரிவித்தார். இதேபோன்று செய்தியாளர்கல்ளிடம் பேசிய பாமக எம்.எல்.ஏ., அருள், “பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இருப்பது மட்டுமே கட்சி” என வலியுறுத்தினார்.





















