![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
EPS on Sasikala: ‛சூரியனை பார்த்து...’ அது தான் சசிகலா: எடப்பாடி பழனிச்சாமி காட்டமான கருத்து!
EPS on Sasikala: ‛‛அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இதை பலமுறை சொல்லியாச்சு...’’ -எடப்பாடி பழனிச்சாமி.
![EPS on Sasikala: ‛சூரியனை பார்த்து...’ அது தான் சசிகலா: எடப்பாடி பழனிச்சாமி காட்டமான கருத்து! AIADMK edappadi palanisamy slams Sasikala after meeting with Tamil nadu Governor RN Ravi EPS on Sasikala: ‛சூரியனை பார்த்து...’ அது தான் சசிகலா: எடப்பாடி பழனிச்சாமி காட்டமான கருத்து!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/20/abad5d8589020c28636f5789ae4c2d1e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக ஆளுநர் ரவியை சந்தித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அப்போது சசிகலா தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி காரமான பதிலை அளித்தார். இதோ அந்த பதில்...
‛‛அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இதை பலமுறை சொல்லியாச்சு. சூரியனை பார்த்து... அது தான்(சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் பாதிப்பு என்கிற பழமொழி). அதிமுகவிற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை,’’ என கறாராக கூறினார்.
இதுவரை சசிகலா தன்னை அதிமுகவிற்கு பாத்தியமானவர் என பலமுறை நிலைநாட்ட முயற்சித்த போதும், அது பற்றி பெரிய அளவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கருத்து சொல்லாமல் இருந்தது. இந்நிலையில் தான் இன்று ஆளுநர் சந்திப்புக்கு பின் அவர் இது மாதிரியான கருத்தை தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுக்குப் பின் அமைதியாக இருந்த சசிகலா, அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மீண்டும் அதிமுகவிற்கு உரிமை கோரும் படத்தை தொடங்கினார். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை, எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில் விசிட் என இரு நாட்கள் பேசு பொருளாக மாறினார். மூன்றாவது நாளில், தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார். ஒன்றிணைவோம் என்கிற நோக்கில் அவர் எழுதிய கடிதம் இருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தான், இன்று எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவுக்கு எதிரான கருத்தை அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)