மேலும் அறிய

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் செய்த ஓபிஎஸ்-இபிஎஸ்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலமான எம்.ஜி.ஆர்., மாளிகையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்க, அவர்கள் வேட்புமனுவை அளித்தனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். வரும் 8ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எப்படி தேர்தல் நடைபெறும்?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், எப்படி அந்த தேர்தல் நடைபெறவுள்ளது என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் அதிமுக தொண்டர்களிடையேயும் மக்களிடையேயும் நிலவி வருகிறது.

தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூட சமீபத்தில் சேலத்தில் அளித்த பேட்டியில் 7ஆம் தேதி தேர்தலா ? அப்படி ஒரு தேர்தலும் கிடையாது என சொல்லியிருப்பார். உண்மையில், அவர் ஆணையராக நியமிக்கப்பட்டதும் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அவருக்கே தெரியாது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் செய்த ஓபிஎஸ்-இபிஎஸ்!

இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பதிலாக, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என திருத்தம் செய்யப்பட்டது. அதேபோல், இருவரையும் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

 ஒற்றை வாக்கின் படி தேர்வு என்றால் எப்படி..?

எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக இருக்கும்போது பொதுக்குழு உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு தலைமை இருப்பதால் இரண்டு பேருக்கும் தனித்தனியாக வாக்கு செலுத்தும் நிலை இருந்தது. ஆனால், செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், இவர்கள் இருவரையும் இனி ஒற்றை வாக்கின் அடிப்படையிலேயே அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம்.

தனித்தனியாக போட்டியிட முடியாது

அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தனியாகவோ, இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தனியாகவோ யாரும் போட்டியிடமுடியாது. இந்த இரு பதவிக்கும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றால், ஒரே மனுவாகதான் தாக்கல் செய்யப்படவேண்டும். அதன்படி, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ஒரே மனுவாக தாக்கல் செய்தனர்.

எதிர்த்து எப்படி போட்டியிடுவது ?

இவர்களை எதிர்த்து யாரேனும் போட்டியிடவேண்டும் என்றால், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒருவர், அதேபோல் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒருவர் என இருவர் சேர்ந்து ஒரே மனுவாக தாக்கல் செய்யவேண்டும். கடந்த காலங்களில் பொதுச்செயலாளர் எப்படி ஒற்றை வாக்கின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அதேபோல, ஒரே வாக்கு அடிப்படையில் தற்போது உள்ள ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

தேர்தல் எப்படி நடைபெறும் ? 

ஓபிஎஸ் - இபிஎஸ்-ஐ எதிர்த்து, கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் எந்த இடை நீக்கமும் செய்யப்படாமல் தொடரும் உறுப்பினர்கள் யாரேனும் இருவர், ஒரே மனுவாக தாக்கல் செய்து, அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், வரும் 7ஆம் தேதி அடிப்படை உறுப்பினர்கள் வாக்கு செலுத்தும் நடைமுறை இருக்கும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Embed widget