மேலும் அறிய

கடிதம் அனுப்பிய ஓபிஎஸ், வாங்க மறுத்த ஈபிஎஸ்’ கட்சியும் சின்னமும் இருந்தும் சுயேட்சையாக போட்டியிடும் ரத்தத்தின் ரத்தங்கள்..?

உள்ளாட்சி அமைப்புக்களுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவினர் சுயேட்சையாக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

உள்ளாட்சி அமைப்புக்களுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவினர் சுயேட்சையாக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து கையெழுத்து போடாததால், அதிமுக வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் – இரட்டை இலை சின்னமும் கிடைக்காது. 

ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்து போட நான் தயார் என்றும், அந்த படிவங்களை தனக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தியும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் மகாலிங்கம் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு ஒபிஎஸ் கடிதம் அனுப்பிய நிலையில், அந்த கடிதத்தை வாங்க எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணிக்குள் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்ட படிவங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்காவிட்டால், அதிமுக உறுப்பினர்கள் சுயேட்சைகளாக போட்டியிடும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவார்கள், அதேபோல், அவர்களுக்கு இரட்டை இலை சின்னமும் கிடைக்காது.

எடப்பாடி பழனிசாமி கையெழுத்துபோட மறுத்துள்ள நிலையில், வேறு வழியின்றி அதிமுக வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக, தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலும் அதேபோல், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை பொறுத்தவரை 2 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சி கவுன்சிலர்கள், 8 பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் சின்னங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ‘ஏ’ மற்றும் ‘பி’என்ற இரண்டு படிவங்களை தேர்தல் விதிமுறைபடி சமர்பிக்க வேண்டும். அந்த படிவங்களில் கட்சியின் தலைவர் அல்லது அந்த கட்சிகளின் பொதுச்செயலாளர் கையெழுத்து இட வேண்டும் என்பது விதி.

அதிமுகவை பொறுத்தவரை வேட்பு மனு படிவங்களில் ஒபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து கையெழுத்து போட்டால் மட்டுமே செல்லும் என்ற நிலை இருக்கும் நிலையில், தற்போது அதிமுகவில் ஒபிஎஸ் – ஈபிஎஸ் இரு துருவங்களாக பிரிந்து நிற்பதாலும், பொதுக்குழுவில் இவர்களின் தேர்வுக்கு ஒப்புதல் பெறாத நிலையிலும், அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டதாக சிவி சண்முகம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அறிவித்திருப்பதாலும் வேட்பு மனு படிவத்தில் யார் கையெழுத்து போடுவார்கள் என்ற குழப்பமும் சிக்கலும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவினர் சுயேட்சையாக போட்டியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை -   சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை - சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
America Vs Venezuela: கரீபியன் கடலில் குவிந்த போர் கப்பல்கள்; வெனிசுலா மீது தாக்குதலா.? என்ன செய்யப் போகிறார் ட்ரம்ப்.?
கரீபியன் கடலில் குவிந்த போர் கப்பல்கள்; வெனிசுலா மீது தாக்குதலா.? என்ன செய்யப் போகிறார் ட்ரம்ப்.?
Temba Bavuma: பவுமா எனும் பவர்ஹவுஸ்.. 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் முதன்முறை - என்னப்பா?
Temba Bavuma: பவுமா எனும் பவர்ஹவுஸ்.. 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் முதன்முறை - என்னப்பா?
KV Recruitment: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9,126 வேலைவாய்ப்புகள்! ஆசிரியர் அல்லாத பணியிடமும் உண்டு- உடனே விண்ணப்பிங்க!
KV Recruitment: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9,126 வேலைவாய்ப்புகள்! ஆசிரியர் அல்லாத பணியிடமும் உண்டு- உடனே விண்ணப்பிங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஐயப்ப பக்தர்கள் கட்டுப்பாடு! பம்பையில் நீராட தடை? கேரள அரசு அதிரடி
அக்கா மீது செருப்பு வீச்சு!  எல்லைமீறிய தேஜஸ்வி! உடையும் லாலு குடும்பம்
கண்ணைக் கவரும் விளக்குகள் அகல்கள் தயாரிக்கும் பணி தீவிரம் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை | Karthigai Deepam 2025 |
Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்
”சேட்டன் வந்தல்லே”CSK-வில் இணைந்த சஞ்சு ஜடேஜா, சாம் கரனுக்கு TATA..! | CSK Trade 2026

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை -   சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை - சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
America Vs Venezuela: கரீபியன் கடலில் குவிந்த போர் கப்பல்கள்; வெனிசுலா மீது தாக்குதலா.? என்ன செய்யப் போகிறார் ட்ரம்ப்.?
கரீபியன் கடலில் குவிந்த போர் கப்பல்கள்; வெனிசுலா மீது தாக்குதலா.? என்ன செய்யப் போகிறார் ட்ரம்ப்.?
Temba Bavuma: பவுமா எனும் பவர்ஹவுஸ்.. 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் முதன்முறை - என்னப்பா?
Temba Bavuma: பவுமா எனும் பவர்ஹவுஸ்.. 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் முதன்முறை - என்னப்பா?
KV Recruitment: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9,126 வேலைவாய்ப்புகள்! ஆசிரியர் அல்லாத பணியிடமும் உண்டு- உடனே விண்ணப்பிங்க!
KV Recruitment: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9,126 வேலைவாய்ப்புகள்! ஆசிரியர் அல்லாத பணியிடமும் உண்டு- உடனே விண்ணப்பிங்க!
Rishabh Pant: “இதனால தான் தென்னாப்பிரிக்கா கிட்ட தோத்துட்டோம்“; ரிஷப் பண்ட் கூறிய காரணம் என்ன தெரியுமா.?
“இதனால தான் தென்னாப்பிரிக்கா கிட்ட தோத்துட்டோம்“; ரிஷப் பண்ட் கூறிய காரணம் என்ன தெரியுமா.?
Orange Alert: 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா.?
7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா.? வெளுத்து வாங்கப்போகுது கன மழை
கொட்டும் மழையில்
கொட்டும் மழையில் "கோவிந்த" கோஷம்! மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவ திருத்தேரோட்டம் கோலாகல கொண்டாட்டம்..!
Trump Reduces Tax: தன் வினை தன்னைச் சுடும்.! உள்நாட்டில் எகிறய விலைவாசி; 200 பொருட்களின் இறக்குமதி வரியை குறைத்த ட்ரம்ப்
தன் வினை தன்னைச் சுடும்.! உள்நாட்டில் எகிறய விலைவாசி; 200 பொருட்களின் இறக்குமதி வரியை குறைத்த ட்ரம்ப்
Embed widget