அதிமுக புல்லட் ரயில் !!அப்டேட் இல்லாத உதயநிதி ! ராயபுரத்தில் போட்டியிடுவது உறுதி- ஜெயக்குமார்
இன்ஜின் இல்லாத ரயில் என அதிமுக குறித்து உதயநிதி விமர்சனம் செய்த நிலையில் , அதிமுக புல்லட் ரயில் போன்றது வேகமாக இயங்கி கொண்டிருப்பதாகவும் உதயநிதி அப்டேட் ஆகவில்லை என ஜெயக்குமார் விமர்சனம்

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் , அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை அலுவலகத்தில் இன்று முதல் டிசம்பர் 23 வரை விருப்பமுனு வழங்கப்படுகிறது.
இதனையொட்டி தமிழக முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த நிர்வாகிகள் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வரைவோலை (டிடி) கொடுக்கப்பட்டு விருப்பு மனுவை வாங்கிக் கொண்டனர்.
இந்த நிலையில் முதல் நாளான இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி , ஜெயக்குமார் , கோகில இந்திரா, கே.பி முனுசாமி, வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவதற்கும், முன்னாள் அமைச்சர்கள் அவரவர் போட்டியிடுவதற்கான விருப்பு மனுவை பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ;
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்ப முனு விநியோகம் நடைபெற்று வருவதாகவும் தொண்டர்களின் எழுச்சி தெரிகிறது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி வாகை சூடும் , திமுக தலைவர் ஸ்டாலினை வழி நடத்துவது அதிமுக - வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் என்றும் அதிமுக புல்லட் ரயில் அதுக்கு இன்ஜினை தேவையில்லை.
இன்ஜின் இல்லாத கார் அ.தி.மு.க என்ற உதயநிதி விமர்சனம் செய்தது தொடர்பான கேள்விக்கு
டெக்னாலஜி வளர்ந்து கொண்டு இருப்பதாகவும் , இது குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியவில்லை. வேகமாக சென்று கொண்டிருக்கின்ற அதிமுக இயக்கத்தை அப்டேட் இல்லாத உதயநிதி சொல்வது அவரைக் கேவல படுத்திக் கொள்ளக் கூடிய விஷயம் தான்.
பாஜக கூட்டணி சீட்டு விவகாரம் தொடர்பான கேள்விக்கு ;
தி.மு.க ஆடிய ஆட்டத்திற்கு மூன்று மாதம் கழித்து பதில் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணி மற்றும் தொகுதியை குறித்து கட்சி தான் முடிவு செய்யும் என்றும் , நான் எதுவும் செய்ய முடியாது. தன் வாழ் நாள் முழுவதும் ராயபுரம் தான் , ராயபுரம் தொகுதி மக்களை விட்டு விலக மாட்டேன் என்றும் எப்போதும் ராயபுரத்தில் தான் போட்டியிடுவேன் என திட்டவட்டமாக ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுகவின் கொள்கை முடிவை குறித்து நான் பேச முடியாது என்றும் பதவிக்காக பணத்திற்காக திமுகவினர் எப்படி வேண்டும் என்றாலும் இருப்பார்கள் எனவும் குறிப்பிட்டார்.





















