மேலும் அறிய

C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!

'திமுகவில் விஜயபாஸ்கர் இணைந்ததும் அவருக்கு உடனடியாக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது’

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், அவர் விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.

எடப்பாடியை எதிர்த்து போர்கொடி

சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுத்தோல்வியை தழுவிய நிலையில் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோருடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்கொடித் தூக்கினார் சி.விஜயபாஸ்கர். குறிப்பாக, தவெக ஆட்சிக்கு ஆதரவளித்தும் சட்டப்பேரவையில் வாக்களித்தார். இதனால், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்கி, புதிய மாவட்ட செயலாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் கடும் அதிருப்தியடைந்த விஜயபாஸ்கர் அப்போதே வேறு கட்சியில் இணைய திட்டமிட்டார்.

தவெக-வா? அண்ணாமலை இயக்கமா ?

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக சீனியர்கள் பலரும் சென்று சேர்ந்துள்ள நிலையில், அந்த கட்சிக்கு செல்லலாமா என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் தொடர்ச்சியாக கருத்துக் கேட்டுவந்தார். தவெக சென்றால் உரிய மரியாதை கிடைக்காது என்றும் கொள்கை ரீதியாக செயல்பட வேறு ஒரு பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்றும் விஜயபாஸ்கருக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கத்தில் இணைந்து பயணிப்பது தொடர்பாகவும் விஜயபாஸ்கர் ஆலோசித்துள்ளார். நேரடியாக அண்ணாமலைக்கு வாழ்த்துச் சொல்லி அவரிடமே இது குறித்து விஜயபாஸ்கர் பேசியதாக கூறப்படுகிறது. இருப்பினும், அண்ணாமலை இன்னும் தன்னுடைய இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றத சூழலிலும் இயக்கத்திற்கு பெயர் சூட்டாத நிலையிலும் அவருடம் இப்போதே இணைந்து பயணிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக தன்னுடைய தனிப்பட்ட நலம்விரும்பிகள் தெரிவித்ததையடுத்து அந்த திட்டமும் கைவிடப்பட்டிருக்கிறது.

 

 

 

விஜயபாஸ்கர் வருகையை தடுக்க முயற்சித்த ரகுபதி

இறுதியாக தாய் கழகமான திமுகவிற்கே சென்றுவிடலாம் என்ற முடிவை எடுத்து, திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார் விஜயபாஸ்கர். இதையறிந்த புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரகுபதி அதிர்ச்சிக்குள்ளாகி, விஜயபாஸ்கருக்கு எதிராக பிரஸ்மீட் கொடுத்திருந்தார். விஜயபாஸ்கர் திமுகவிற்குள் வந்தால் தன்னுடைய பிடிப்பு மாவட்டத்தில் விட்டுவிடும் என்ற அச்சத்தில் விஜயபாஸ்கர் திமுகவில் இணைய முயற்சிப்பதை தடுக்க ரகுபதி பல வழிகளில் முயற்சித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், விஜயபாஸ்கரின் புத்திக் கூர்மை, கள எதார்த்ததை அறிந்து அவர் செயல்படும் விதம், அவருக்கு மாவட்டத்தில் இருக்கும் செல்வாக்கு இவற்றையெல்லாம் கணக்கிட்டு திமுகவில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் நபர் ஒருவர் விஜயபாஸ்கர் வருகை திமுகவிற்கு கூடுதல் பலமாகதான் இருக்கும் என்று கணக்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதனடிப்படையில் விஜயபாஸ்கர் திமுகவில் இணைவது உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், எதிர்ப்பு தெரிவித்த ரகுபதியிடமும் திமுக தலைவர் வீட்டில் இருந்தே நேரடியாக பேசப்பட்டுவிட்டதாகவும், அவருடைய முக்கியத்துவம் குறைக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

தாய் கழகத்தில் இணையும் விஜயபாஸ்கர்

இதனையடுத்து, தொடர்ந்து விராலிமலையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் விஜயபாஸ்கர், தாய் கழகமான திமுகவில் இணைய முடிவு செய்துவிட்டதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு நாளில் இணைப்பு

இன்னும் இரண்டு நாளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சி.விஜயபாஸ்கர் அண்ணா அறிவாலயம் வந்து திமுகவில் தன்னுடைய ஆதரவாளர்களோடு இணையும் விழா நடைபெறவிருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget