ABP Nadu Exclusive: உதயநிதி ஏன் அமைச்சராக வேண்டும்..? கார்த்திகேய சிவசேனாபதி பேட்டி
மோடியின் அரசியல் அனுபவம் குறித்து நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, அவர் எந்த பள்ளியில், கல்லூரியில் படித்தார் என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது என்று பதில் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் ஏன் அமைச்சராக வேண்டும் என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு திமுகவின் சுற்றுச்சூழல் பிரிவின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பதில் அளித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் ஏன் அமைச்சராக வேண்டும் என்று எதற்காக பதிவு போட்டீர்கள்?
உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிகேணி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர். கட்சியில் இருக்கக் கூடிய பல்லாயிரக்கணக்கான எண்ணம் இதுதான். அவர் இளைஞரணி செயலாளராக இருக்கிறார். கடந்த தேர்தல்களில் தன்னிச்சையாக தேர்தல்களில் வேலை பார்த்துள்ளார். தொடர்ந்து பொதுவெளியில் திராவிட சித்தாந்தம், பெரியார் சித்தாந்தம், கலைஞர் உடைய அரசியல் சித்தாந்தத்தை பின்பற்றி வாழக்கூடியவர் ஒருவர். அதனால், உதயநிதியை அமைச்சர் ஆக்குவதன் மூலம், இளைஞர்களிடையே ஒரு பெரிய எழுச்சி இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை.
உதயநிதி முதல்முறையாக எம்எல்ஏ ஆகியிருக்கிறார். 7 மாதங்கள்தான் ஆகியுள்ளது. அதற்குள் உதயநிதி அமைச்சராக வேண்டிய தேவை ஏன்?
நரேந்திர மோடி 15 வருடங்களாக எதிர்க்கட்சி தலைவராக இருந்து அதன்பிறகு குஜராத்தின் முதலமைச்சராக ஆனாரா..?. அவரை கொண்டாடக் கூடிய கூட்டம். உதயநிதியை அமைச்சராக்குவது குறித்து ஏன் இழிவாகவும், கிண்டலாகவும் பேசுகிறார்கள்.
மோடியின் அரசியல் அனுபவம் குறித்து நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, அவர் எந்த பள்ளியில், கல்லூரியில் படித்தார் என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. தாராபுரத்தில் எம்எல்ஏ வேட்பாளராக நின்று தோல்வியுற்ற எல்.முருகனை, உடனடியாக வேறு ஒரு மாநிலத்தில் கொண்டுபோய் நிறுத்தி ஒன்றிய அமைச்சர் பதவியை கொடுக்கிறார்கள்.
பாஜகவில் வேறு தலைவர்கள் கிடையாதா? . 2018இல் காவல்துறை பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு வந்த ஒருவருக்கு உடனடியாக தமிழ்நாட்டின் பாஜக தலைவராக வேண்டுமா? . இத்தனை வருடங்கள் உழைத்த எல்.கணேசன். எச்.ராஜா இல்லையா?
அதே கேள்வியைதான் உங்களை நோக்கி கேட்கிறார்கள்.
திமுகவில் ஒரு கோடி பேர் இருக்கின்றனர். இந்த ஒரு கோடி பேரில், கருணாநிதி குடும்பத்தில் அவருடைய மகன் கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாக திமுகவிற்காகவும், மக்களுக்காகவும் எம்எல்ஏவாக, மேயராக, எதிர்க்கட்சி தலைவராக, மிசா கைதியாக படாதபாடுபட்டு வந்தவர். கருணாநிதியின் மகன் என்ற அடிப்படையில் அவர் அங்கு வந்து உட்காரவில்லை. 14 வயதில் இருந்து உழைத்து இந்த பொறுப்பிற்கு வந்துள்ளார்.
ஸ்டாலின் ஒவ்வொருபடியாக முன்னேறி, தற்போது முதலமைச்சர் ஆகியிருக்கிறார். உதயநிதிக்கு என்ன அனுபவம் இருக்கிறது என்று கேட்கிறார்கள்.
விவசாயம் குறித்து வாழ்ந்த குடும்பத்தில் விவசாயம் பற்றி அறிவு இருக்கும். டாக்டரின் மகன்களுக்கு மருத்துவம் சார்ந்த அறிவு இருக்கும். அதேபோல், உதயநிதிக்கு அரசியல் அனுபவம் இருக்கும். நமக்கு படித்தவர்கள் அரசியலில் வர வேண்டும் என்று விவாவதம் செய்கிறோம். படித்த உதயநிதி அரசியலுக்கு வந்து இருக்கிறார். உதயநிதி தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எங்கேயும் கேட்டது இல்லை. வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு, மாதம் 10 நாட்கள் கோவையில் தங்குகிறேன் என்று உதயநிதி கூறியிருக்கிறார். அப்படி வருகிறவர் அமைச்சராகவே வர வேண்டும் என்பது எங்களின் ஆவல்.
மேலும், Go Back Modi, கனிமொழி தொடர்பான பல கேள்விகளுக்கும் பதில் கூறியுள்ளார். அதனை தெரிந்துக்கொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்