மேலும் அறிய

‘அரசியல் வாழ்க்கையை அழித்துவிடுவேன் என வைகோ என்னை மிரட்டினார்’ சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ ராஜா பரபரப்பு புகார்..!

'என்னை வைகோ போனில் தொடர்புகொண்டு மிரட்டியது தொடர்பாக மாவட்ட செயலாளர் மூலம் திமுக தலைமைக்கு தகவல் தெரிவித்திருக்கிறேன்’

கலிங்கப்பட்டிக்கு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தராவிட்டால் என்னுடைய அரசியல் வாழ்க்கையையே அழித்துவிடுவேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மிரட்டினார் என சங்கரன்கோவில் (தனி) தொகுதி திமுக எம்.எல்.ஏ ராஜா பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.

‘அரசியல் வாழ்க்கையை அழித்துவிடுவேன் என வைகோ என்னை மிரட்டினார்’ சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ ராஜா பரபரப்பு புகார்..!
சங்கரன்கோவில் (தனி) திமுக எம்.எல்.ஏ ராஜா

குருவிகுளம் ஒன்றியத்தைச் சேர்ந்த சாய மலையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றினால் அதை சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர் என்று திமுக எம்.எல்.ஏ ராஜா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் மனு அளித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ ராஜாவின் கோரிக்கையை ஏற்று சாய மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.‘அரசியல் வாழ்க்கையை அழித்துவிடுவேன் என வைகோ என்னை மிரட்டினார்’ சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ ராஜா பரபரப்பு புகார்..!

ஆனால், கலிங்கப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தாமல், சாய மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை அறிந்த வைகோ, சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ –வான ராஜாவை தொடர்புகொண்டு கடுமையாக பேசி மிரட்டியுள்ளார்.

‘அரசியல் வாழ்க்கையை அழித்துவிடுவேன் என வைகோ என்னை மிரட்டினார்’ சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ ராஜா பரபரப்பு புகார்..!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் எம்.எல்.ஏ ராஜா

இது குறித்து சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜாவிடம் கேட்டபோது, வைகோ என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியது உண்மைதான். என் அரசியல் வாழ்க்கையையே அழித்துவிடுவதாக சொன்னதும் உண்மைதான் என்றார். எதற்காக அப்படி உங்களிடம் பேசினார் என கேட்டதற்கு, மக்களுக்கு பொதுவான இடமாக இருக்கக் கூடிய சாய மலை அல்லது குருவி குளத்திலேயே மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில் பணிகளை செய்ய அறிவுறுத்தினேன்.  வைகோ கலிங்கப்பட்டி சுகாதார நிலையத்தை மேம்படுத்த கேட்டது சத்தியமாக எனக்கு தெரியாது.‘அரசியல் வாழ்க்கையை அழித்துவிடுவேன் என வைகோ என்னை மிரட்டினார்’ சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ ராஜா பரபரப்பு புகார்..!

மாவட்ட செயலாளர் போனில் இருந்து எனக்கு அழைத்த வைகோ என்னை கடுமையாக திட்டினார். நான் பதில் அளிக்க அவகாசம் கூட கொடுக்காமல், எனக்கே அரசியல் கற்றுக்கொடுக்றீயா ? உன்ன ஜெயிக்க வச்சதுக்கு நீ காட்டுற நன்றி இதுதானா ? என்று ஆவேசமாக பேசினார்.‘அரசியல் வாழ்க்கையை அழித்துவிடுவேன் என வைகோ என்னை மிரட்டினார்’ சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ ராஜா பரபரப்பு புகார்..!

அதுமட்டுமில்லமால் உன்ன முதலமைச்சர் கிட்ட சொல்லி, நீ இனிமே அரசியலிலேயே இல்லாமல் செய்துவிடுவேன் என்றேல்லாம் மிரட்டினார். தொகுதி பக்கம் நீ வரவும் முடியாது, எதுவும் செய்ய முடியாது. இது குறித்து எங்கள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் மற்றும் திமுக தலைமைக்கும் தகவல் சொல்லியிருக்கிறேன் என்றார்.

 

 

 

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget