மேலும் அறிய
Advertisement
மியான்மரில் மீட்கப்பட்ட 13 தமிழர்கள்... இன்னும் 50 பேர் சிக்கி இருக்கலாம்.. அமைச்சர் சொன்ன தகவல்
மியான்மரில் சிக்கி தவித்த தமிழர்கள் 13 பேர் மீட்கப்பட்டு சென்னை திரும்பினர்.
சென்னை விமான நிலையத்தில் மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த புதுக்கோட்டை அப்துல்லா, தென்காசி விக்னேஷ், கோயம்புத்தூர் வெஸ்லி, குமார், வேலூர் அகமது, சச்சின், ஊட்டி சிவசங்கர், பொள்ளாச்சி செளந்தர், அரியலூர் செல்வி, கன்னியாகுமரி பிரசாந்த, ஜெனிகாஸ், கரூர் மணிக்குமார், திருச்சி செபாஸ்டின் ஆகிய 13 பேர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் , தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்கென்று பல்வேறு ஏஜென்டுகள் மூலம் அழைத்து சென்று தாய்லாந்து நாட்டிற்கு அழைத்து சென்று பக்கத்தில் இருக்கும் மியான்மர் நாட்டிற்கு அவர்களுக்கு சொன்ன வேலையை தவிர்த்து மற்ற வேலைகளை கொடுத்துள்ளனர். அதனை செய்ய மறுத்துள்ளனர்.
அங்கு சிக்கி தவித்த நபர்கள் குறித்த செய்தியின் வாயிலாக தமிழக முதலமைச்சருக்கு தகவல் கொடுத்து பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதினார். தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் தற்போது அழைத்து வந்துள்ளனர். அவர்களை இல்லம் செல்ல வழிவகை செய்துள்ளோம். சுமார் 50 தமிழர்கள் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வருகிறது.
அழைத்து சென்ற ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டதற்கு முறையான தகவல்கள் கிடைக்கவில்லை, வெளிநாட்டிற்கு வேலை செல்வோர் தமிழக அரசில் பதிவு செய்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். ஒவ்வொருவரையும் அழைத்து பேசி இருக்கிறோம். அவர்கள் நிலை குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று பொருளாதார ரீதியான உதவிகள் செய்யபடும். இது குறித்து மியான்மரில் சிக்கித் தவித்தவர்கள் பேசுகையில் தகவல் தொழில்நுட்ப வேலை இல்லாமல் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைக்கும் வேலையை செய்ய வேண்டும் என நிர்பந்தித்தாகவும் செய்ய மறுத்தவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும், அதற்கு தண்டனைகளை கொடுத்ததாகவும் தெரிவித்தனர். மீட்டு வந்த அரசிற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion