![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
100 கோடிக்கு மேல் சொத்துக்கள் படத்திற்கு 10 கோடி சம்பளம் என மகாராணி போல் வலம் வரும் நடிகை நயன்தாரா.
மகாராணி போல் வலம் வரும் நடிகை நயன்தாராவிற்கு 100 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன, ஒரு படத்திற்கு 10 கோடி வாங்குகிறார்.
![100 கோடிக்கு மேல் சொத்துக்கள் படத்திற்கு 10 கோடி சம்பளம் என மகாராணி போல் வலம் வரும் நடிகை நயன்தாரா. Nayanthara’s Huge Net Worth Ft. 100 Crore Worth Properties, 10 Crore/Film Fees & Much More To Drop Your Jaws! 100 கோடிக்கு மேல் சொத்துக்கள் படத்திற்கு 10 கோடி சம்பளம் என மகாராணி போல் வலம் வரும் நடிகை நயன்தாரா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/10/39875d8dfa81c95de6c565d6547032a81662750101026224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மகாராணி போல் வலம் வரும் நடிகை நயன்தாராவிற்கு 100 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன, ஒரு படத்திற்கு 10 கோடி வாங்குகிறார்.
நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் மிகவும் மரியாதைக்குரிய நடிகை.ராஜா ராணி, அண்ணாத்தே போன்ற பல திரைப்படங்களை நமக்குக் கொடுத்து, தனது வசீகரத்தாலும், சிறந்த நடிப்புத் திறனாலும் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் பணக்கார நடிகைகளில் ஒருவராகக் கருதப்பட்டாலும், அவரது நிகர சொத்து மதிப்பு மற்றும் அவரது வாழ்க்கைத் தரத்தைப் காண்போம்.
அண்மையில் தனது காதலரும் திரைப்பட இயக்குனர் மற்றும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
மீடியா போர்ட்டலான 'இன்ஃபினிட்டி நெட் வொர்த்' படி, நடிகை நயன்தாராவின் நிகர மதிப்பு 22 மில்லியன் டாலர்கள் , அதை ரூபாயாக மாற்றும் போது சுமார் ரூ. 165 கோடி . அவரது வருமானத்தின் பெரும்பகுதி அவரது திரைப்படங்கள் மூலம் கிடைக்கிறது. இது மட்டும் இன்றி விளம்பரங்களில் பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் வருகிறது. நயன்தாரா தற்போது ஜெயம் ரவியுடன் வரவிருக்கும் திரைப்படத்திற்காக சுமார் ரூ 10 கோடியை வசூலித்து வருகிறார், இதனால் தென் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஆவார்.
மேஜிக் பிரிக்ஸ் படி, நயன்தாரா தனது சொத்துகளைப் பற்றி பேசுகையில், இந்தியா முழுவதும் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, இதில் ஹைதராபாத்தில் இரண்டு ஆடம்பர வீடுகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் ரூ. 15 கோடி மதிப்பெயர் ஆகும். இந்த அப்பார்ட்மெண்ட்கள் ஹைதராபாத்தில் பிரபலங்கள் வசிக்கும் பஞ்சாரா ஹில்ஸில் அமைந்துள்ளது. இதனுடன் சென்னையில் அவருக்கு இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் ஒவ்வொன்றும் தலா நான்கு படுக்கை அறைகளை கொண்டவை ஆகும். மேஜிக் பிரிக்ஸ் கணக்குப்படி நயன்தாராவின் சொத்து மதிப்பு மொத்தம் 100 கோடி ரூபாய் ஆகும் .
இது தவிர, தென்னிந்திய நடிகைக்கு ஒரு தனியார் ஜெட் விமானமும் உள்ளது. டெக்கான் ஹெரால்ட் செய்தியின்படி, நயன்தாரா சமீபத்தில் ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாங்கினார், அதை அவர் சென்னை-ஹைதராபாத் மற்றும் சென்னை-கொச்சியில் இருந்து தனது பயணங்களுக்கு பயன்படுத்துகிறார். அவரது தனிப்பட்ட ஜெட் மட்டுமல்ல, 4 சக்கர வாகனங்கள் என்று வரும் பொழுது நயன்தாராவுக்கு விருப்பமான வாகனங்கள் என்று சில வாகனங்களை வைத்திருக்கிறார். கார் டெகோவின் கூற்றுப்படி, ரூ. 74.50 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் ரூ. 88 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் 350டி ஆகியவற்றை வைத்திருக்கிறார், என்பது குறிப்பிடத்தக்கது . இது தவிர, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, ஃபோர்டு எண்டெவர் மற்றும் பிரமிக்க வைக்கும் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஆகியவற்றையும் அவர் வைத்திருக்கிறார், ஆக இந்த கால்களின் மதிப்பு சுமார் ரூ.1.76 கோடிக்கு வருகிறது.
நயன்தாரா விளம்பர பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் ரூ 5 கோடிகளை வாங்குகிறார். தனிஷ்க், டாடா ஸ்கை, கே பியூட்டி மற்றும் உஜாலா போன்ற பிரபலமான பிராண்டுகளுடன் அவர் ஒப்பந்தத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் போலவே நயன்தாராவின் முதலீட்டைப் பற்றி பேசுகையில், தனது சொந்த தோல் பராமரிப்பு பிராண்டான "தி லிப் பாம் கம்பெனி" என்ற பெயரில் டாக்டர் ரெனிதா ராஜனுடன் கூட்டு சேர்ந்துள்ளார். இது தவிர உணவு சேவையை வழங்கும் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏசியாநெட் என்ற செய்தி சேனலின்படி, நயன்தாரா ஒரு புதிய மற்றும் லாபகரமான எண்ணெய் வணிகத்தில் முதலீடு செய்வதாகக் குறிப்பிடப்பட்டு, அதற்காக பெரும் தொகையை செலவிட்டதாகக் கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)