உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகிறாரா என்.வி.ரமணா?

ஆந்திர தலைநகர் அமராவதிக்கான நிலக் கையகப்படுத்தலில் தனது உறவினர்களுடன் சேர்ந்துகொண்டு என்.வி.ரமணா ஊழலில் ஈடுபட்டதாக அந்த மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அவர் மீது புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US: 

இந்திய உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்கவிருக்கிறார். வரும் 23 ஏப்ரலில் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பணி ஓய்வுபெறவிருக்கும் நிலையில்  அடுத்த தலைமை நீதிபதிக்கான பரிந்துரையை அனுப்பக்கோரி மத்திய சட்டத்துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதம் 19-ஆம் தேதி அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதற்கு பதிலளித்து எழுதிய கடிதத்தில் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணாவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார். இந்தியாவின் 48-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் ரமணா வரும் 26 ஆகஸ்ட் 2022 வரைக்கும் அந்தப் பதவியில் இருப்பார்.  உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகிறாரா என்.வி.ரமணா?

நூதலபட்டி வெங்கட்ரமணா (எ) என்.வி.ரமணா ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதவி வகித்த ரமணா வருடம் 2000-இல் அதன் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2013-இல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தவர் அதற்கடுத்த மூன்றே மாதங்களில் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

63 வயதாகும் என்.வி.ரமணா ஆந்திர தலைமைச் செயலகமான அமராவதிக்கான நிலக் கையகப்படுத்தலில் தனது உறவினர்களுடன் சேர்ந்துகொண்டு ஊழலில் ஈடுபட்டதாக  அந்த மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

Tags: NV Ramana SA Bobde CJI Union Law ministry Chief justice of India

தொடர்புடைய செய்திகள்

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

’5 லட்சத்தில் திருமணம்: 38 லட்சத்தில் நன்கொடை’ : வாரி வழங்கிய ஆச்சரிய மணமக்கள்..!

’5 லட்சத்தில் திருமணம்: 38 லட்சத்தில் நன்கொடை’  : வாரி வழங்கிய ஆச்சரிய மணமக்கள்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

டாப் நியூஸ்

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!