மேலும் அறிய

7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த சம்பவங்கள்..! இதோ காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..!

Headlines கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட முன்வடிவு நிறுத்தி வைப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
  • வணிக பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களில் மதுபானம் பரிமாற சிறப்பு உரிமம் வழங்கும் முறை நீக்கம் - எதிர்ப்புகளை தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை
  • தமிழ்நாட்டில்  திருமண மண்டபங்களில் மதுபானம்  பரிமாற அனுமதி இல்லை - மற்ற மாநிலங்களைப் போல  சர்வதேச நிகழ்ச்சிகளில் மட்டுமே அனுமதி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
  • எடப்பாடி பழனிசாமி ஒரு நம்பிக்கை துரோகி, அவரை வரலாறு மன்னிக்கது - திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு
  • கர்நாடக மாநிலத்தின் புலிகேசி தொகுதி வேட்பாளரை திரும்பப் பெற்றார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
  • அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள்  ஜுன் மாதத்திற்கு தள்ளிவைப்பு
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி கடன் - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
  • கைத்தறி, கைவினைப் பொருள் மற்றும் உணவு வகைகளுடன் வரும் 29ம் தேதி தொடங்கி மே 14ம் தேதி வரை நடைபெறுகிறது சென்னை விழா

இந்தியா:

  • மத்தியில் காங். ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் - ராகுல் காந்தி உறுதி
  • கர்நாடக சட்டசபை தேர்தலின்  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு - 2,163 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர்
  • ஹீரோவாக உருவாகியிருக்கும் பாஜகவை ஜீரோ ஆக்க வேண்டும் - பீகார் முதலமைச்சர் உடனான சந்திப்பிற்கு பிறகு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சு
  • 2021-22 நிதியாண்டில் 189 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்ற 26 மாநில கட்சிகள் - மாரத் ராஷ்டிர சமிதி கட்சி முதலிடம்
  • தெலங்கானாவில் போராட்டத்திற்கு சென்றபோது தடுத்து நிறுத்திய காவலரை கன்னத்தில் அறைந்த ஆந்திர முதலமைச்சரின் தங்க ஷர்மிளா - கைது நடவடிக்கையால் பரபரப்பு
  • இந்தியாவில் விற்பனைக்கு  வந்தது மாருதி சுசுகி  நிறுவனத்தின் ஃப்ரோன்ஸ் கார் - அடிப்படை விலை ரூ.7 லட்சம் என நிர்ணயம்
  • ராஜஸ்தானில் 2 லாரிகள் மோதி நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

உலகம்:

  • இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானது
  • அமெரிக்காவில் பள்ளி இசை விருந்து விழாவில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு -  9 பேர் படுகாயம் என தகவல்
  • கென்யாவில் மதபோதகர் பண்ணை நிலத்தில்  தோண்ட, தோண்ட பிணங்கள் - 47 உடல்கள் மீட்பு
  • பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை - ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா
  • பாகிஸ்தானின் காவல் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்
  • ஆப்ரிக்க நாடானா பர்கினாபசோவில் ஆயுதமேந்திய  மர்ம கும்பல் ராணுவ உடையணிந்து  வந்து 60 பேரை சுட்டுக்கொன்று விட்டு தப்பியோட்டம் 

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன
  • ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபாரம்
  • சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயரை சூட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்
  • சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி -  பாகிஸ்தான் மற்றும் சீன அணிகள் பங்கேற்பது உறுதி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

P Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget