மேலும் அறிய

உங்க பகுதி விநாயகர் சிலை எப்படி இருக்கணும்? மாவட்ட ஆட்சியர் விதித்த 5 முக்கிய விதிகள் இதுதான்..

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விநாயக சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகர் சிலைகளை அமைப்பது மற்றும் நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா ப்ரியா, முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பண்டிகைக் காலத்தில் பின்பற்ற வேண்டிய பல்வேறு முக்கிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பும்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கி வருகிறது. இயற்கை வளங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாப்பதில் மக்களுக்குப் மிகப்பெரிய கடமையும் பொறுப்பும் உள்ளது. நமக்குத் தேவையான குடிநீர் ஆதாரத்தை வழங்கும் கடல், ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளை மாசடையாமல் காப்பது மிகவும் அவசியமாகும். வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் அதே வேளையில், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைத்து, இயற்கை வளங்களைப் பாதுகாக்க பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிலை உற்பத்தி மற்றும் அலங்கார விதிமுறைகள்

களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள் மற்றும் வைக்கோல் போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தலாம். சிலைகளைப் பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களைப் பயன்படுத்தலாம். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சுத் தன்மையுள்ள மற்றும் மக்காத இரசாயனச் சாயங்களையோ அல்லது எண்ணெய் வண்ணப்பூச்சுகளையோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. மாற்றாக, நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சு கலப்பற்ற இயற்கைச் சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதேபோல, அலங்காரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

விழா ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

பொதுமக்கள் மற்றும் விழா அமைப்பாளர்கள் பண்டிகையின் போது பல நன்நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை மட்டுமே பூஜைப் பொருட்களாகப் பயன்படுத்த வேண்டும். அலங்காரத்திற்கு அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்கக் கூடிய துணிகளைப் பயன்படுத்தலாம். பிரசாத விநியோகத்தின் போது மக்கும் அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளையே பயன்படுத்த வேண்டும். மேலும், மின்சாரத்தைச் சேமிக்கும் வகையில் எல்.இ.டி பல்புகளைப் பயன்படுத்த வேண்டும். விழாவின் முடிவில் உருவாகும் குப்பைகளைப் பொறுப்புடன் பிரித்து அப்புறப்படுத்துவதுடன், அலங்காரப் பொருட்களை எதிர்காலப் பண்டிகைகளுக்காகச் சேமித்து வைத்து மீண்டும் பயன்படுத்தப் பழக வேண்டும்.

தவிர்க்க வேண்டிய முக்கிய நடைமுறைகள்

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகள், நச்சு இரசாயன வண்ணப்பூச்சுகள் மற்றும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. விழாப் பந்தல்களில் பயன்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சுகுழாய்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குப்பைகளையும் கழிவுகளையும் கண்ட இடங்களில் கொட்டாமல் முறையாகப் பராமரிக்க வேண்டும். அதிக மின்சாரத்தைப் நுகரும் ஃபிலமென்ட் பல்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளைக் கொண்டு போய் கரைக்கக் கூடாது.

ஆட்சியரின் அழைப்பு மற்றும் பங்கேற்பாளர்கள்

தமிழகத்திற்குச் சூழலியல் பாதுகாப்பில் நீண்டகாலப் பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி என்பது வெறும் தெய்வீகக் கொண்டாட்டம் மட்டுமல்லாமல், நமது சுற்றுப்புறத்தின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஏற்று, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து வடிவேல், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சதீஷ் குமார் மற்றும் அரசுத் துறை சார்ந்த பல்வேறு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayiladuthurai Power Shutdown 21.11.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 5 மணி நேரம் மின் தடை: முழு ஏரியா லிஸ்ட் இதோ! 
Mayiladuthurai Power Shutdown 21.11.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 5 மணி நேரம் மின் தடை: முழு ஏரியா லிஸ்ட் இதோ! 
Mayiladuthurai Power Shutdown 21.11.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின் தடை: முழு ஏரியா லிஸ்ட் இதோ! 
Mayiladuthurai Power Shutdown 21.11.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின் தடை: முழு ஏரியா லிஸ்ட் இதோ! 
பலிகடா ஆக்கப்படுகிறாரா கிளை மேலாளர்? சீர்காழி எம்.எல்.ஏ-வின் 'ரீல்ஸ்' மோகத்தால் அரசு அதிகாரிக்கு வந்த வினை!
பலிகடா ஆக்கப்படுகிறாரா கிளை மேலாளர்? சீர்காழி எம்.எல்.ஏ-வின் 'ரீல்ஸ்' மோகத்தால் அரசு அதிகாரிக்கு வந்த வினை!
சாலைக்கு வந்த சில நாட்களிலேயே 'மக்கர்'... புதிய அரசுப் பேருந்தின் தரம் இதுதானா?
சாலைக்கு வந்த சில நாட்களிலேயே 'மக்கர்'... புதிய அரசுப் பேருந்தின் தரம் இதுதானா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Revanth Reddy: ”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
TN Weather News: புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
OM Box Office: ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
Hyundai Verna: ரூ.11 லட்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்..! கொரிய நிறுவனத்தின் மெகா சம்பவம் - அம்சங்கள், வசதிகள்
ரூ.11 லட்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்..! கொரிய நிறுவனத்தின் மெகா சம்பவம் - அம்சங்கள், வசதிகள்
"மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படும்" - கர்நாடக முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
Embed widget